Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வில் இருக்கும் கோலிக்கு எது முக்கியம்? வெஸ்ட் இண்டீஸ் தொடரா? ஆசிய கோப்பையா?

மும்பை : விராட் கோலி ஆசிய கோப்பையில் ஆடாதது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார் இந்திய முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பாட்டில்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. ஆறு நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

முக்கிய வீரரான விராட் கோலிக்கு ஏன் ஓய்வளிக்கப்பட்டது? முக்கிய தொடரான ஆசிய கோப்பையில் முன்னணி வீரரை ஒய்வு பெற சொல்வது சரியா? அந்த முடிவை யார் எடுத்தது? என தன் கேள்விகளை முன் வைத்துள்ளார் சந்தீப் பாட்டில்.

டி20-யால் வேலைப்பளுவா?

டி20-யால் வேலைப்பளுவா?

"முன்பு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு வரும் ஒவ்வொரு சிறுவனும் நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற கனவுகளோடு உள்ளே நுழைவான். ஆனால், டி20 தொடர்கள் வந்த உடன், நம் நாட்டு வீரர்களே தேசிய கடமையை விட்டுவிட்டு ஐபிஎல் போட்டிகளுக்கு தங்களை தயார் செய்து கொள்கிறார்கள்" இப்படி சொல்லி இருக்கிறார் சந்தீப் பாட்டில். ஐபிஎல் போட்டிகள் ஆட முக்கிய சர்வதேச போட்டிகளின் போது ஓய்வெடுக்க செல்கிறார்கள் என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்? ஆசிய கோப்பை?

வெஸ்ட் இண்டீஸ்? ஆசிய கோப்பை?

"கோலிக்கு ஓய்வளிக்க வேண்டிய முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டு இருக்கலாம். என் கேள்வி என்ன என்றால், கோலியை ஆசிய கோப்பையில் ஆட வைத்துவிட்டு, சொந்த மண்ணில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வளித்தால் என்ன? எந்த தொடர் முக்கியம் என சொல்வீர்கள்? ஆசிய கோப்பையா? வெஸ்ட் இண்டீஸ் தொடரா? பாகிஸ்தான் மாதிரி ஒரு நாடு ஆடும்போது நிச்சயம் ஆசிய கோப்பை தான் முக்கிய தொடர். அதில் வெல்வது நிறைய மகிழ்ச்சியை கொடுக்கும்" என கேள்விகளால் விளாசியுள்ளார் சந்தீப்.

ரோஹித் சமாளிப்பாரா?

ரோஹித் சமாளிப்பாரா?

"இப்போது ரோஹித் முன் பெரிய பணி உள்ளது. அவர் அணியை திரட்ட வேண்டும், சரியான சமநிலைக்கு அணியை எடுத்து வர வேண்டும். ஆனால், அவருக்கு அதிக நேரம் இல்லை. சரியாக தயார் செய்யாமல் போனாலும், அது நமக்கு பின்னடைவாக இருக்கும். இங்கிலாந்திலும் அதே தான் நடந்தது" என தன் கருத்துக்களை கூறி இருக்கிறார் சந்தீப்.

நீங்களே சொல்லுங்க மக்களே

நீங்களே சொல்லுங்க மக்களே

சரி, இப்போது சந்தீப் பாட்டில் சொல்வது இருக்கட்டும். நாமே யோசித்து பார்ப்போம். இந்திய தேர்வாளர்கள் என்ன நினைத்து இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள். ஒருவேளை, இலங்கை, வங்கதேசம், ஹாங்காங், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் எல்லாம் கோலியின் திறமைக்கு முன் ஒன்றுமே இல்லை என நினைத்து இப்படி முடிவெடுத்தார்களா? பாகிஸ்தான் இப்போது மிக வலுவாக மாறி வருகிறது. சாம்பியன்ஸ் ட்ராபியில் அந்த அணி இந்தியாவை இறுதியில் வீழ்த்தியது. அப்போதும் கோலி தான் கேப்டன். ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இந்தியாவோடு குரூப் சுற்றிலேயே ஆட உள்ளது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரண்டு அணிகளில், இந்தியா, பாகிஸ்தான் நிச்சயம் இருக்கும். அப்போது அந்த இறுதிப் போட்டி முக்கியமில்லையா? அதில் கோலி ஆடுவது உதவியாக இருக்காதா?

ரவி சாஸ்திரி, கோலி இணைந்ததில் இருந்து இந்திய கிரிக்கெட்டில் பல விஷயங்கள் தவறாக நடக்கின்றன என்பது மட்டும் உண்மை.

Story first published: Saturday, September 15, 2018, 17:46 [IST]
Other articles published on Sep 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+