Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மயங்க் அகர்வால் செலக்ட் பண்ண இவரு தான் காரணம்..! தலை சுற்ற வைத்த ரகசியம்...லீக் செய்த பிசிசிஐ

Recommended Video

Mayank Agarwal | மயங்க் அகர்வாலுக்கு அணியில் இடம் இல்லை- வீடியோ

மும்பை:, உலக கோப்பையில் மயங்க் அகர்வாலை ஏன் எடுத்தோம் என்று தேர்வுக்குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத் புதிய விவரத்தை வெளியிட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று அறிவித்தார். அதன்பின்னர் அவரிடம் உலக கோப்பை அணி தேர்வு, ராயுடு நீக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அனைத்தும் பதில் வைத்திருந்த அவர் நிதானமாகவே பதில் அளித்தார். அவரது பதில்களில் இருந்து அணியில் உள்ள பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்தது ஏன் என்று கேட்கப்பட்டது.

மாற்று வீரர்கள் பட்டியல்

மாற்று வீரர்கள் பட்டியல்

பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய் சங்கர் காயத்தால் விலகினார். ஆனால், மாற்று வீரர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்த அம்பத்தி ராயுடுவை எடுக்காமல் மயங்க் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் காரணம்?

யார் காரணம்?

அதற்கும் எம்எஸ்கே.பிரசாத் பதிலளித்துள்ளார். பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு கேஎல் ராகுல் தான் காரணம் என்றும் கூறியிருக்கிறார். அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க டைவ் அடிக்கும்போது ராகுல் கீழே விழுந்தார்.

 கோரிக்கை வைப்பு

கோரிக்கை வைப்பு

பின்னர் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. எனவே அவரது உடற்தகுதி குறித்த அச்சமும் அணி நிர்வாகத்திற்கு இருந்தது.ஆகையால், விஜய் சங்கர் காயத்தால் விலகியதை அடுத்து மாற்று தொடக்க வீரர் ஒருவர் தேவை என்று அணி நிர்வாகத்திடமிருந்து எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்பட்டது.

உள்நோக்கம் இல்லை

உள்நோக்கம் இல்லை

எனவே அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை, கேல்எல் ராகுல் கூறியதால் தான் மயங்க் அகர்வால் உள்ளே வந்தார் என்று எம்எஸ்கே பிரசாத் கூறினார்.

Story first published: Monday, July 22, 2019, 13:37 [IST]
Other articles published on Jul 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+