மீண்டும் விஜய் சங்கருக்கு எப்படி வாய்ப்பு கிடைச்சது? கோலி சொன்ன அந்த ரகசிய விஷயம்
சவுதாம்ப்டன்: ஆப்கானிஸ்தானை எளிதில் நினைக்கக் கூடாது என்பதோடு, அணியில் மாற்றம் வேண்டாம் என்று நினைத்ததால் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.
இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் யார், யார் இடம் பிடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. புவனேஸ்குமார் காயம் சரியாகததால் அவருக்கு பதிலாக முகமது ஷமி பெயர் ஏற்கனவே டிக் அடிக்கப்பட்டு விட்டது.
தொடக்க வீரர் தவான் காயத்தால் நாடு திரும்பி இருக்கும் நிலையில் கடந்த போட்டியில் கேஎல் ராகுலுடன் களத்தில் ரோகித் சர்மாவுடன் இன்னிங்சை தொடங்கினார். எதிர் பார்த்ததை விட, அருமையான தொடக்க தந்தது இந்த ஜோடி.

காயம் தந்த கவலை
அந்த போட்டியில் இந்த அணிக்கு அபார வெற்றி. அதன்பிறகு, பயிற்சி போட்டியில் விஜய் சங்கர் என்ற செய்தியால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். உடனே, ரிஷப் பன்ட் அல்லது தினேஷ்கார்த்திக் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒரேயொரு மாற்றம்
இவர்களில் ஒருவர் வந்தால், விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் பரவலாக பேசப்பட்டன. ஆனால்.... எல்லாத்துக்கும் மாறாக, அணியில் ஒரேயொரு மாற்றம் தான் செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ஷமி வந்திருக்கிறார்.

கோலி என்ன சொன்னார்?
வேறு எந்த மாற்றமும் அணியில் இல்லை. ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர் என்று சொல்லலாம். இது குறித்து கோலி சொன்ன ஒரு விஷயம் ரொம்ப முக்கியமானது. ஆப்கானிஸ்தானை குறைவாக மதிப்பிடவில்லை. ஆகவே... ஷமியை மற்றும் அணியில் சேர்த்து உள்ளோம். வேறு எந்த மாற்றமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

வாய்ப்பு அவ்வளவு தான்
இதன்மூலம் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. தினேஷ் கார்த்திக்குக்கு உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்று சொல்லலாம். கோலி சொன்னது போல அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள கூடாத அணியா ஆப்கானிஸ்தான்.

புள்ளி விவரங்கள் என்ன?
எந்த அணியை எளிதாக எடை போட கூடாது என்பது விளையாட்டில் முக்கியமானது என்றாலும்.. ஆப்கானிஸ்தானின் தற்போதைய புள்ளி விவரங்களை அவர் கவனிக்க தவறிவிட்டார் என்றும் சொல்லலாம். தற்போது காணப்படும் ஆப்கன் அணியில் போராட்ட குணமும் இல்லை. சிறந்த வீரர்களும் அவ்வளவாக இல்லை எனலாம்.

முக்கிய வீரர்கள் இல்லை
ஆசிய கோப்பைப் போட்டியில் இந்திய அணியோடு டை செய்த அணி ஆப்கானிஸ்தான். அப்போது கேப்டனாக இருந்த அஸ்கர் ஆப்கனுக்கு தற்போது அணியில் நிரந்தர இடம் என்பதே இல்லை. அன்று ஆட்ட நாயகன் விருது வாங்கியவர் முகமது செஷாத் . அவரும் இல்லை... அத்தோடு.. அந்த போராட்ட குணமும் இல்லை. ஆக ஆப்கானிஸ்தான் அணியில் வீரியம் இல்லை என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications