ஆமா.. ஏன் யுவராஜ் சிங்கை பந்து வீச அனுமதிக்கலை கோஹ்லி?
லண்டன்: இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஏன் பந்து வீசவில்லை என்பது குறித்து கேப்டன் விராத் கோஹ்லி விளக்கியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா சிறப்பாக பேட் செய்தும், பந்து வீச்சில் கோட்டை விட்டதால் தோல்வியைத் தழுவியது.
இந்தியப் பந்து வீச்சு எவ்வளவு மோசமாக இருந்தது என்றால் அவர்களால் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. மற்ற இரு விக்கெட்களும் ரன் அவுட்டில் விழுந்தவை என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

யுவராஜ் ஏன் இல்லை
இந்த நிலையில் யுவராஜ் சிங் நேற்று பந்து வீசாதது குறித்து கோஹ்லியிடம் கேட்கப்பட்டது. அதற்கு கோஹ்லி கூறுகையில், நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட நிலைதான் யுவராஜுக்கும் ஏற்பட்டிருக்கும். (ஜடேஜா 6 ஓவர்களில் 52 ரன்களை வாரிக் கொடுத்தார்).

அடித்து நொறுக்கும்போது
பேட்டிங் செய்யும் அணி நான்கு அல்லது 5 விக்கெட்களை இழந்த நிலையில் இருந்தால், போட்டி முடிய குறைந்த ஓவர்களே இருந்தால் யுவராஜ் சிங் போன்றவர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அப்போதைய நிலையில் இலங்கை வலுவான நிலையில் இருந்தது. ஓவர்களும் நிறை இருந்தனர். ஜடேஜாவையே அவர்கள் வெளுத்துக் கொண்டிருந்தனர்.

நிச்சயம் முடியாது
ஜடேஜாவாலேயே சமாளிக்க முடியாபோது யுவராஜ் சிங்காலும் எந்த மாற்றத்தையும் கொடுத்திருக்க முடியாது. நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். எனவேதான் அவர் பந்து வீச அழைக்கப்படவில்லை.

டோணியிடம் கேட்டேன்
கேதார் ஜாதவை பவுல் செய்ய அழைப்பது குறித்து டோணியிடம் ஆலோசித்தேன். யுவராஜை விட ஜாதவ் பெட்டர் என இருவருமே நினைத்தோம். இங்கிலாந்து சீதோஷ்ணத்திற்கு "சீம்" இருந்தால் நல்லது என்பதால் ஜாதவை தேர்வு செய்தோம். ஆனால் அது கிளிக் ஆகவில்லை என்றார் கோஹ்லி.


Click it and Unblock the Notifications