Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி என்ன சாதனை வேண்டுமானாலும் செய்யட்டும்.. எப்போதுமே நம்பர் 2 தான்.. கிரிக்கெட் ஜாம்பவான் பேச்சு

போர்ட் ஆப் ஸ்பெயின் : சர்வதேச கிரிக்கெட்டில் 500 வது போட்டியில் களமிறங்கிய விராட் கோலி சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இதன் மூலம் 500 வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் விராட் கோலியை குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கொர்ட்னி வால்ஷ், அவருடைய சாதனைகளை ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

WI Legend Walsh rated virat kohli behind sachin tendulkar

இது தொடர்பாக பேசிய அவர் விராட் கோலி நிச்சயமாக இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர் தான். ஆனால் அவரை நான் சச்சினுக்கு பின்னால் தான் எப்போதுமே வைத்திருப்பேன். ஏனென்றால் சச்சின் தான் நான் பார்த்து விளையாடியதிலேயே சிறந்த வீரர்.
ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரராக ஏன் பார்வையில் பிரைன் லாரா , விவயன் ரிச்சர்ட்ஸ் எப்போதுமே டாப் இரண்டு இடத்தில் இருப்பார்கள் இதேபோன்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோரும் சிறந்த வீரராக விளங்கி இருக்கிறார்கள்.

இதே போன்று இங்கிலாந்து வீரர் கிரகாம் கோச், பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியாண்டட் கூட நான் அதிகமாக விளையாடவில்லை என்றாலும் அவர்களும் தங்களுடைய விக்கெட்டுகளை மிகவும் மதித்து அவ்வளவு சீக்கிரம் அவுட் ஆகாமல் இருப்பார்கள்.
விராட் கோலியும் அதேபோல் தான் இருக்கிறார். அவருக்கு அவுட் ஆக மனம் வரவில்லை. இதனால் நிச்சயமாக என்னுடைய டாப் போர் கிரிக்கெட் வீரர்களின் எப்போது விராட் கோலி இருப்பார்.

WI Legend Walsh rated virat kohli behind sachin tendulkar

கிரிக்கெட் மீது தீராத காதல் விராட் கோலிக்கு இருக்கிறது. கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விராட் கோலி ஆசைப்படுகிறார். நான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு உறுப்பினராக இருந்தபோது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.அப்போது நாங்கள் பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறோம்.

அப்போது நான் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று விராட் கோலி நினைத்திருந்தார். பெரியவர்களிடமிருந்து ஏதேனும் அறிவுரை கேட்கவும் விராட் கோலி தயாராகவே இருந்தார். விராட் கோலியின் சாதனைகளை நினைத்து நான் ஒன்னும் ஆச்சரியப்படுவதில்லை. அவருக்கு இருக்கும் வெறி நிச்சயமாக அவரை டாப் 3 அல்லது டாப் 5 வில் எப்போதுமே வைத்திருக்கும் என்று வால்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Friday, July 21, 2023, 23:37 [IST]
Other articles published on Jul 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+