Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI -ஹேட்மயர் அதிரடி ஆட்டம்.. இமாலய இலக்கை எட்டிய வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியாவின் தலை தப்புமா?

ஃபுளோரிடா : இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்திய அணி களமிறங்கியது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ள நிலையில் இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா இருந்தது.

WI set 179 runs as target for India in 4th t20

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து கேல் மேயர்ஸ் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த நிலையில் ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்துவீசி இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றினார். இதன் பிறகு நிக்கோலஸ் பூரான் களத்திற்கு வந்தார். அப்போது குல்தீப் யாதவ் கையில் பந்து சென்றது.

குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி ஒரே ஓவரில் நிக்கோலஸ் பூரான் மற்றும் ரோமன் போவ ஆகியோரின் விக்கெட்டுகளை தலா 1 ரன்களில் வீழ்த்தினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. எனினும் சாய் ஹோப், அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் சரிவில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டது. 29 பந்துகளில் சாய் ஹோப் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களை விளாசி 45 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹேட்மயர் தன்னுடைய வழக்கமான அதிரடி காட்டினார்.

ஹேட்மயர் எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக அபாரமாக விளையாடக்கூடியவர். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பிய நிலையில் தற்போது ஆக்ரோஷமாக ஆடி சிக்சர் பவுண்டரிகளை பறக்க விட்டார். எனினும் கீழ் வரிசை வீரர்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றாலும் தனி ஆளாக நின்று இந்தியாவை அவர் பறக்க விட்டார்.39 பந்துகளில் 61 ரன்களை ஹெட்மயர் குவிக்க, திலக் வர்மாவின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Saturday, August 12, 2023, 21:52 [IST]
Other articles published on Aug 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+