Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs AFG : 6,5,5,4,4,6,6.. ஒரே ஓவரில் 36 ரன்கள்.. ஆஃப்கானை அலறவிட்ட பூரன்.. ரன் வள்ளலான ஓமர்சாய்!

செண்ட் லூசியா : ஆஃப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாய் வீசிய ஒரே ஓவரில் 36 ரன்கள் விளாசப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் யுவராஜ் சிங், பொல்லார்ட், திபேந்திர சிங் ஆகியோருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் ஒரே ஓவரில் 36 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வீரர் ஸ்டூவர்ட் பிராட் பவுலிங்கில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸ் அடித்து வரலாற்று சாதனை படைத்தார். ஒரே ஓவரில் 36 ரன்கள் விளாசப்பட்ட சம்பவம் டி20 கிரிக்கெட்டுக்கே விளம்பரம் போல் மாறியது. இதன்பின் ஒரே ஓவரில் 36 ரன்கள் சேர்க்கப்படும் சம்பவம் அரிதாக நிகழ்ந்து வந்தது.

t20 world cup indian national cricket team cricket Nicholas Pooran 20 2024

ஒருமுறை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட் ஒரே ஓவரில் 36 ரன்களை விளாசினார். அதேபோல் அண்மையில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இணைந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 36 ரன்களை சேர்த்தனர். நேபாளம் வீரர் திபேந்திர சிங் கத்தார் அணிக்கு எதிராக 36 ரன்களை விளாசினார்.

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 36 ரன்களை விளாசி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஓவர்கள் முடிவில் 37 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது. இதன்பின் பூரன் - சார்லஸ் கூட்டணி பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இந்த நிலையில் 4வது ஓவரை வீச ஆஃப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாய் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே நிக்கோலஸ் பூரன் அபார சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. ஆனால் அது நடுவரால் நோ-பால் என்று அறிவிக்கப்பட, மீண்டும் வீசிய பந்து ஒய்டு மற்றும் பவுண்டரிக்கு சென்றது. இதனால் ஒரு பந்து வீசிய நிலையில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தில் ரன் எதுவும் சேர்க்கப்படவில்லை.

தொடர்ந்து 3வது பந்தில் லெக்-பை பவுண்டரி செல்ல, 4வது பந்தில் நிக்கோலஸ் பூரன் அபாரமாக ஒரு பவுண்டரியை விளாசினார். பின்னர் 5வது பந்தில் கவ் கார்னர் திசையில் 89 மீட்டர் தூரத்திற்கு பூரன் ஒரு சிக்சரை அடிக்க, கடைசி பந்தில் மீண்டும் பந்து சிக்சருக்கு பறந்தது. இதன் மூலமாக ஒரே ஓவரில் 36 ரன்களை விளாசி நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 36 ரன்களை விளாசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Tuesday, June 18, 2024, 7:45 [IST]
Other articles published on Jun 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+