For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி நான் யுனிவர்சல் பாஸ் அல்ல.. கிறிஸ் கெயில் எடுத்த திடீர் முடிவு.. ஐசிசி-யால் வந்த வினை - விவரம்

லூசியா: ஐசிசி செய்த ஒரு விஷயத்தால், இனி யுனிவெர்ஸல் பாஸ் என தன்னை கூறிக்கொள்ளப்போவதில்லை என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

இனிமே நான் Universal Boss இல்ல.. Chris Gayle எடுத்த முடிவுக்கு இதான் காரணம்

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உருவாகிறது கங்குலி வாழ்கை திரைப்படம்.. பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்.. பெரும் பட்ஜெட்டில் திட்டம்! உருவாகிறது கங்குலி வாழ்கை திரைப்படம்.. பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்.. பெரும் பட்ஜெட்டில் திட்டம்!

அதிரடி ஆட்டக்காரர் காட்டிய சிக்ஸர் மழைதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

142 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர்கள் ஆண்ட்ரே ப்ளட்சர் (4), சிம்மன்ஸ் (15) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர். பின்னர் கிறிஸ் கெயில் தான் அணியை மீட்டு கொண்டு வந்தார். ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை நாலா புறமும் சிக்ஸருக்கு விரட்டி அசத்தினார். அவர் 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 67 ரன்கள் குவித்து பழைய ஃபார்முக்கு திரும்பினார்.

அவர் 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 67 ரன்கள் குவித்து பழைய ஃபார்முக்கு திரும்பினார்.

தி பாஸ்

தி பாஸ்

இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத சுவாரஸ்ய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது. கிறிஸ் கெயிலுக்கு தி யுனிவர்சல் பாஸ் என்ற அடைமொழியும் உண்டு. ஐபிஎல் ரசிகர்கள் அந்த பெயரில் தான் அவரை அழைப்பார்கள். கெயிலும் தன்னை அப்படி அழைக்கவே விரும்புவார். அதற்கேற்றார் போல தனது பேட்டில் யுனிவர்செல் பாஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டியிருப்பார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் வெறும் 'பாஸ்' என்று மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

காரணம் என்ன

காரணம் என்ன

ஏன் இந்த திடீர் மாற்றம் என கெயிலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், நான் யுனிவர்சல் பாஸ் என்று கூற விரும்புவேன் தான். எனினும் நான் அப்படி கூறிக்கொள்வது ஐசிசி-க்கு பிடிக்கவில்லை. அப்படி கூறிக்கொள்ள கூடாது என நினைக்கிறது எனவே, நான் எனது அடைமொழியை சுருக்கி தி பாஸ் என்று வைத்துக்கொண்டேன் எனத்தெரிவித்தார். மேலும் யுனிவர்சல் பாஸ் என அழைக்க ஐசிசி காப்புரிமை வைத்துள்ளதா என நிருபர் ஒரு கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த கெயில், நான் தான் அதற்கு காப்புரிமை வாங்கியிருக்க வேண்டும். ஐசிசி அல்ல.. நான் டெக்கினிக்கலி ஸ்ட்ராங் என அவர் கூறினார்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

நேற்று நடைபெற்ற போட்டியில் புதிய சாதனை ஒன்றையும் கெயில் படைத்தார். இதுவரை 431 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 14,038 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் 545 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10, 836 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 13, 2021, 20:21 [IST]
Other articles published on Jul 13, 2021
English summary
Chris Gayle Reveals that ICC didn't want him to use the Universe Boss, Fans getting upset
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X