For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜெய்ச்சிட்டோம் மாறா! கண்ணீர் சிந்தி கொண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்- முதல் முறை ஆஸ்திரேலியா தோல்வி

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்று இருக்கிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.

 WI vs AUS 2nd test - Historical win by west indies in australia soil after 26 years

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஹாட்ஜ் மற்றும் ஜோஸ்வா டீ சில்வா, சின்கிளையர் ஆகியோர் அரை சதம் கடந்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அபாரமாக பந்து வீச ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது. எனினும் அலெக்ஸ் கேரி மற்றும் உஸ்மான் கவாஜா கேப்டன் ஆகியோர் அபாரமாக ரன் சேர்த்து அரைசதம் கடக்க ஆஸ்திரேலிய அணி 289 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது.

இதனை அடுத்து 22 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதில் மெக்கன்சி 41 ரன்களும், ஏத்தான்சே 35 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 33 ரன்கள் எடுக்க 193 ரன்களில் அந்த அணி ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இதில் உஸ்மான் கவாஜா 10 ரன்களிலும், மார்னஸ் லாபஸ்சேன் ஐந்து ரன்களிலும் டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகியும், கேமரான் கிரீன் 42 ரன்களும், அலெக்ஸ் கெரி 2 ரன்கள் எடுத்து அந்த அணி கடுமையாக தடுமாறியது.

எனினும் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் கடுமையாக போராடினார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 20 ரன்கள் இருக்க வெஸ்ட் இண்டீஸ் இன் வெற்றிக்கு இரண்டு விக்கெட்டுகள் தேவைப்பட்டது. இதனால் போட்டி பரபரப்பின் உச்சத்துக்கு சென்றது. எனினும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கூலாக பந்து வீசி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்மித் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரையும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்தது. பகல் இரவு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் சம்மர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்களை விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

Story first published: Sunday, January 28, 2024, 13:21 [IST]
Other articles published on Jan 28, 2024
English summary
WI vs AUS 2nd test - Historical win by west indies in australia soil after 26 years வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி.. 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது - WI vs AUS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+