Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ - தலை கீழாக குதித்து முதல் விக்கெட்டை கொண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. பரபர கட்டத்தில் WI,AUS

பிரிஸ்பேன் : வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நேற்று தொடங்கியது. இரவு பகல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒருமுறை கூட தோல்வியை தழுவியது கிடையாது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பின்னடைவை சந்தித்து இருக்கிறது.

WI vs AUS Day night test - West indies cricketer Kevin Sinclair wicket celebration attracts fans


முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேவம் ஹஜ், ஜோஷ்வா டி சில்வா மற்றும் கெவின் சின்க்ளியர் ஆகியோர் அரை சதம் கடக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் எடுத்தது.இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் கடுமையாக தடுமாறியது. ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன், கேமரான் கிரீன் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சொற்ப ரன்களின் வெளியேற ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இதனை அடுத்து உஸ்மான் கவாஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இதேபோன்று அவருக்கு அலெக்ஸ் கேரி நல்ல துணையாக நிற்க கேப்டன் பாட் கம்மின்ஸ், அதிரடியாக விளையாடி 64 ரன்கள் சேர்த்தார். இதனால் இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.


இதை அடுத்து 22 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணியை விட வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் கூடுதலாக பெற்று இருக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சின் கிளையர் பந்து வீசும் போது செய்த காரியம் தற்போது வைரலாகி இருக்கிறது.சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உஸ்மான் கவஜாவின் விக்கெட் அவர் வீழ்த்தி முதல் விக்கெட்டை எடுத்திருக்கிறார்.


இந்த சந்தோஷத்தை தாங்க முடியாத கெவின் சின் கிளையர் திடீரென்று மைதானத்தில் ஓடி வந்து தலைகீழாக குதித்து பல்டி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை கொண்டாடினார். கிரிக்கெட் களத்தில் இது போன்ற ஜிம்னாஸ்டிக் வேலையை இதுவரை எந்த வீரர்களும் செய்ததில்லை. கால்பந்து வீரர்களையே மிஞ்சும் அளவுக்கு கெவின் சின்கிளையர் கொண்டாட்டம் இருந்தது. இதனை அடுத்து யாருடா இவர் என்று ரசிகர்கள் அவர் குறித்து தேடி வருகின்றனர்.

Story first published: Friday, January 26, 2024, 18:08 [IST]
Other articles published on Jan 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+