Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலாவது டி20 போட்டியில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

Recommended Video

முதலாவது டி20 போட்டியில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

வார்னர் பார்க்: வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

wi vs ban


இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று வார்னர் பார்க்கில் நடைபெற்றது. டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே கோல்டன் டக் ஆகி வெளியேறினர். அதன் பின்னர் லிட்டன் தாஸ் மற்றும் மஹ்மதுல்லா இருவரும் சற்று சிறப்பாக விளையாடினர்.

வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேஷ்ரிக் வில்லியம்ஸ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

மழையின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டக் ஒர்த் லெவிஸ் முறைப்படி 11 ஓவர்களில் 91 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆண்ட்ரே ரஸ்ஸிலின் அதிரடி ஆட்டத்தால் 9.1 ஓவர்களில் 93 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Story first published: Thursday, August 2, 2018, 16:14 [IST]
Other articles published on Aug 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+