Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs ENG -ஆண்டர்சன் கடைசி டெஸ்ட்..121 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்..அறிமுக போட்டியில் 7 விக்கெட்

லண்டன் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட் 33 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஆறு ரன்களை சேர்த்த நிலையில் அறிமுக வீரர் அட்கின்ஸன் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

James anderson eng vs wi

இதேபோன்று கிறிக் மெகன்ஸி ஒரு ரன்னிலும், லூயிஸ் 27 ரன்களிலும் வெளியேறினார். இதனால் 44 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. இதை அடுத்து அலிக் ஏதென்சி 23 ரன்களும், கேவம் ஹாட்ஜ் 24 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ஹோல்டர், ஜோஸ்வா டி சில்வா ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

இதே போன்று கடந்த ஆஸ்திரேலியா தொடரில் ஹீரோவாக இருந்த சமர் ஜோசப் இன்றைய ஆட்டத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 121 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெறும் 41.4 ஓவர்களை மட்டும் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அறிமுக வீரராக களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் அட்கின்சன் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.

இதேபோன்று தன்னுடைய கடைசி டெஸ்டில் களம் இறங்கிய ஆண்டர்சன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். 10.4 ஓவர்கள் வீசிய ஆண்டர்சன் 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

பென் டக்கட் மூன்று ரன்களில் வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் ஆலிவ் போப் 57 ரன்களிலும், ஜாக் கிராலி 76 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது.

Story first published: Wednesday, July 10, 2024, 23:11 [IST]
Other articles published on Jul 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+