51 பந்துகளில் சதம் அடித்த பொவேல்..!! இங்கிலாந்தை பொளந்து கட்டிய வெஸ்ட் இண்டீஸ்..!! சிக்சர் மழை..!!
பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் கடும் விறுவிறுப்புக்கும், ரன் விருந்துக்கும் பஞ்சம் இல்லாமல் உள்ளது
Recommended Video
ஆனால், ஒரே ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் போட்டிகள் இந்திய ரசிகர்கள் தூங்கும் நேரத்தில் நடைபெறுகிறது. தூக்கத்தை தியாகம் செய்தவர்களுக்கு அதற்கான பலன் நிச்சயம் கிடைத்திருக்கும்.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது

அதிரடி ஆட்டம்
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக களமிறங்கிய மொயின் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 10 ரன்னிலும், சாய் ஹோப் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான்,பொவேல் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர்.

51 பந்துகளில் சதம்
குறிப்பாக, லாரன்ஸ் வீசிய ஒரு ஓவரில் இந்த ஜோடி 26 ரன்கள் குவித்தது. 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் விளாசிய பூரான் 43 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். மறுபுறும் ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டிய பொவேல் 51 பந்துகளில் சதம் விளாசினார். முடிவில் 107 ரன்களுக்கு பொவேல் ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.

டாம் பான்டன் அதிரடி
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் அதிரடியை காட்டினர். ஜேசன் ராய் 19 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் டாம் பான்டன் 39 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும்.டாம் பான்டன் தனது விக்கெட்டை பறிகொடுக்க மொயின் அலி,வின்ஸ்,லிவிங்ஸ்டோன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

204 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இதனையடுத்து இங்கிலாந்து அணி தினறியது. இறுதியில் பில் சால்ட்,ருத்ரதாண்டவம் ஆடினார்.5 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசிய சால்ட் 24 பந்துகளில் 57 ரன்கள் குவிக்க, மற்ற வீரர்கள் யாரும் துனை நிற்கவில்லை. இதனால் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது


Click it and Unblock the Notifications