Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 பந்துகளில் 4 சிக்சர்.. 23 பந்துகளில் அரைசதம்.. சி.எஸ்.கே. வீரர் மொயின் அலியின் அதிரடியால் WI அவுட்

பார்பிடாஸ்: மேற்கிந்திய தீவுகள் அணியும், இங்கிலாந்து அணியும் மோதிய 4வது இருபது ஓவர் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது.

Recommended Video

ENG vs WI T20 : Moeen Ali அதிரடி.. West Indies-ஐ வீழ்த்திய England

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

இந்த நிலையில், 4வது ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் பொலார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து நிதானம்

இங்கிலாந்து நிதானம்

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டாம் பான்டன் 4 ரன்களில் வெளியேற,மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜேசன் ராய் அரைசதம் விளாசினார்.ஜேம்ஸ் வீன்ஸ் தன் பங்கிற்கு 34 ரன்கள் சேர்த்தார்.லிவிங்ஸ்டோன் 16 ரன்கள் எடுக்க,இங்கிலாந்து அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

மொயின் அலி 63

மொயின் அலி 63

ஜேசன் ஹோல்டர் வீசிய 18வது ஓவரில் இங்கிலாந்து அணியின் தற்காலக கேப்டனும், சி.எஸ்.கே. வீரருமான மொயின் அலி தொடர்ந்து 4 பந்துகளில் 4 சிக்சர் விரட்டி அந்த ஓவரில் 28 ரன்கள் குவித்தார். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 23 பந்துகளில் அரைசதம் கடந்த மொயின் அலி, 7 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாசினார். இதனால் இருபது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.

194 இலக்கு

194 இலக்கு

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரண்டன் கிங் பொறுமையாக 26 ரன்கள் சேர்க்க, நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பிய கையில் மெயர்ஸ், 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். பூரான் தன் பங்கிற்கு 22 ரன்கள் சேர்த்தார்.

தோல்வி

தோல்வி

கடந்த போட்டியில் சதம் விளாசிய போவெல் 5 ரன்களில் வெளியேறினார்.ஹோல்டர் தன் பங்கிற்கு 36 ரன்களும், பொலார்ட் 18 ரன்களும் எடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பந்துவீச்சிலும் மொயின் அலி 2 விக்கெட்டுகளை எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 2க்கு2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

Story first published: Sunday, January 30, 2022, 12:56 [IST]
Other articles published on Jan 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+