Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs ENG- 4வது டி20 போட்டியில் 430 ரன்கள்! இங்கிலாந்து அணியை பொளந்த வெஸ்ட் இண்டீஸ்

கிராஸ் இஸ்லெட் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்களிலும் பங்கேற்கிறது. இதில் ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்ற டி20 தொடரில் இங்கிலாந்து அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது.

இதனை அடுத்து நான்காவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஃபுல் சால்ட் 5 பவுண்டரி நான்கு சிக்சர் என 35 பந்தில் 55 ரன்கள் குவித்தார்.

wi vs eng west indies vs england evan lewis jacob bethell

வில் ஜேக்ஸ் 12 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார். கேப்டன் ஜாஸ் பட்லர் மூன்று சிக்சர் இரண்டு, பவுண்டரி என 23 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். மேலும் நடுவரிசையில் களமிறங்கிய ஜாக்கப் பெத்தல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தார். 5 சிக்சர், நான்கு பவுண்டர் என 32 பந்துகளின் அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 62 ரன்கள் குவித்தார்.

13 பந்துகளில் 24 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. யாருமே எதிர்பாராத வகையில் தொடக்க வீரர் எவன் லிவிஸ் அதிரடியை காட்டினார். ஏழு சிக்ஸர் நாலு பவுண்டரி என ஸ்ட்ரைக் ரேட் 219 என்ற அளவில் எவன் லிவிஸ் அடிக்க 31 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

மறுபுறம் சாய் ஹோப் மூன்று சிக்சர், ஏழு பவுண்டரி என 24 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். சாய் ஹோப்பை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறிய நிலையில் அவர் ரன் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரான் டக் அவுட்டாக கேப்டன் ரோமன் போவெல் 23 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். சிம்ரன் ஹிட் மேயர் ஏழு ரன்களில் ஆட்டம் இழக்க இறுதியில் ருதர்போர்ட் மூன்று சிக்ஸர்கள் விளாசி 17 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் ரெஹான் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த டி20 தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்த்து 32 சிக்ஸர்கள் விளாசி இருக்கிறார்கள். இரு அணிகளுமே தலா 16 சிக்சர்கள் அடித்தனர். மொத்தமாக இன்றைய ஆட்டத்தில் 430 ரன்கள் குவிக்கப்பட்டு இருந்தது.

Story first published: Sunday, November 17, 2024, 7:00 [IST]
Other articles published on Nov 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+