Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த பிராவோ ரெடி.. 21 வயதில் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது.. வெஸ்ட் இண்டீசின் புதிய ஸ்டார்

பார்பிடாஸ் : இரண்டு முறை உலக சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் தகுதி சுற்றிலே வெளியேறியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பது போல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தி இருக்கிறது.

WI vs Eng - Who is Matthew Forde - rising stat in west indies cricket

இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 21 வயது ஆன Mathew forde, என்ற வீரர் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி இருக்கிறார். தன்னுடைய அபாரமான பந்து வீச்சால் மேத்தீவ் போர்டே 29 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். புது பந்தை பயன்படுத்தி அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை உடைத்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 45 ரன்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதேபோன்று பேட்டிங்களும் மேத்திங் ஃபோர்டே 13 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் தாம் களம் இறங்கிய முதல் ஆட்டத்திலே மேத்யூ போர்டேக்கு ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் போர்டே, அடுத்த பிராவோ ஆக வர வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மேத்தியூ போர்டே கிரிக்கெட்டுக்கு புதிது கிடையாது. அவர் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 தொடர்களில் பங்கேற்று தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். கரீபியன் பிரீமியர் லீக்கில் மேத்யூ போர்டே நடப்பாண்டில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று குளோபல் டி20 தொடரில் 8 போட்டியில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இப்படி தன்னுடைய திறமையை பல போட்டிகளில் நிரூபித்து வரும் மேத்யூ பார்டேக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிகிறது.

Story first published: Sunday, December 10, 2023, 20:53 [IST]
Other articles published on Dec 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+