இது யாரு? பொலார்ட் தம்பியா? 170 ரன்கள் குவித்த கேசி கார்டி.. 385 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்
டுபிளின்: அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் பகுதியில் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த தொடர் முடிவடைந்த உடன் அய்லாந்து எதிராக மீண்டும் டி20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சி தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக விளையாடி இருந்தது.

எனினும் மழை காரணமாக அந்த போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டது. இந்த தருணத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி டுபிளினில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால் போட்டி முடிவு கிடைத்தது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க, எவன் லிவிஸ் 14 ரன்களில் வெளியேறினார்.
இதனை அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த கேசி கார்டி அதே பார்மை மூன்றாவது போட்டியிலும் வெளிப்படுத்தினார். அயர்லாந்து பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்ட அவர் ஒரு கட்டத்தில் அதிரடியை காட்டினார். தன்னுடைய அரை சதத்தை 66-வது பந்துகளில் பூர்த்தி செய்த கேசி கார்டி, பின் அதிரடியை காட்டி 112 பந்துகளில் சதம் அடித்தார்
அதன் பின் தன்னுடைய ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்திய அவர், 30 பந்துகளில் 70 ரன்களை அவர் சேர்த்திருக்கிறார்.
இன்னிங்ஸை அவர் கட்டமைத்த விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 142 பந்துகளில் 170 ரன்கள் அடித்த அவர் 15 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார்
கேசி கார்டி பேட்டிங்கை பார்த்து ரசிகர்கள் இவர் என்ன பொலார்டின் தம்பியா என்று பாராட்டி வருகின்றனர். கேப்டன் சாய் ஹோப் 75 ரன்கள் எடுக்க மற்றொரு இளம் வீரரான ஜஸ்டின் கிரிவ்ஸ் 22 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் 50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது. இதனை அடுத்து மழை காரணமாக ஆட்டம் 46 ஓவராக குறைக்கப்பட்டு இலக்கு 363 ரன்கள் என்று மாற்றி அமைக்கப்பட்டது. இதில் அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக அயர்லாந்து வீரர் கேட் கார்மைக்கேல் 61 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 29.5 ஓவர்கள் எல்லாம் அயர்லாந்து அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமன் செய்தது.


Click it and Unblock the Notifications