Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs NEP: 2026 டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8க்கு தகுதி பெற்ற முதல் அணி.. வெஸ்ட் இண்டீஸ் அபாரம்

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பேத் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம், தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ், நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே முழு ஆதிக்கம் செலுத்தியது. நேபாள அணி தோல்வி அடைந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

WI vs NEP West Indies Qualify for Super 8 Shai Hope and Jason Holder Dominate Nepal with a 9-Wicket Victory

பந்துவீச்சில் மிரட்டிய ஹோல்டர், ஃபோர்டு

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நேபாள பேட்ஸ்மேன்கள் திணறினர். முதல் ஓவரிலேயே அகீல் ஹொசைன் விக்கெட் வீழ்த்த, அடுத்து வந்த மேத்யூ ஃபோர்டு தனது துல்லியமான பந்துவீச்சால் நேபாள வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். பவர் பிளே முடிவில் நேபாளம் 3 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறியது.

பின்னர் பந்து வீச வந்த ஜேசன் ஹோல்டர், தனது அனுபவத்தைப் பயன்படுத்தி விக்கெட்டுகளை அள்ளினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நேபாளத்தின் ரன் குவிப்பிற்குத் தடை போட்டார்.

தனி ஆளாகப் போராடிய தீபேந்திர சிங்

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நின்ற தீபேந்திர சிங் ஐரி மட்டும் தனி ஆளாகப் போராடினார். பொறுப்புடன் ஆடிய அவர், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார். இதனால் நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. தீபேந்திர சிங் ஐரி 58 ரன்கள் குவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். பிராண்டன் கிங் ஆட்டமிழந்தாலும், ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் ஜோடி நேபாள பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டது.

தொடர்ந்து சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஷிம்ரன் ஹெட்மயர் 46 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷாய் ஹோப் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். அவர் 61 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16வது ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் நேபாள அணியின் சூப்பர் 8 சுற்று கனவு தகர்ந்தது. தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

Story first published: Sunday, February 15, 2026, 17:23 [IST]
Other articles published on Feb 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+