Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பறிபோன சூப்பர் 8 கனவு.. நியூசிலாந்து அணிக்கு ஆப்பு.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய ரூதர்போர்ட்!

டிரினிடாட் : நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் 26வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் நிதானம் காத்த ஷெர்ஃபானே ரூதர்போர்ட், கடைசி நேரத்தில் அதிரடியில் பொளந்து கட்டினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை சேர்த்தது.

t20 world cup indian national cricket team cricket Sherfane Rutherford 20 2024


சிறப்பாக ஆடிய ரூதர்போர்ட் 39 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 68 ரன்களை விளாசினார். இதன்பின் 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே - ஃபின் ஆலன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பவல் தொடக்கத்திலேயே ஸ்பின்னரை வைத்து அட்டாக் செய்தார். அகில் ஹொசைன் பவுலிங்கில் கான்வே 5 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஃபின் ஆலன் 26 ரன்களில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 6 ஓவர்களில் 36 ரன்கள் சேர்த்திருந்தது.

தொடர்ந்து வந்த கேப்டன் வில்லியம்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திரா 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் மோட்டீ வீசிய மேஜிக் பந்தில் டேரல் மிட்சலும் 12 ரன்களில் போல்டாக, நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. பின்னர் கிளென் பிலிப்ஸ் - நீஷம் கூட்டணி இணைந்து சில மணி நேரம் போராடியது. ஆனால் அல்ஜாரி ஜோசப்பை அட்டாக் செய்ய முயன்று நீஷம் 10 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 40 ரன்களிலும் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது.

இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. சிறப்பாக பவுலிங் செய்த அல்ஜாரி ஜோசப் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், மோட்டீ 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, June 13, 2024, 10:20 [IST]
Other articles published on Jun 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+