Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs NZ : ஒரு வீரரால் தோல்வியடைந்தோம்.. 15 ரன்களில் எங்களை வீழ்த்திவிட்டனர்.. கலங்கிய வில்லியம்சன்!

டிரினிடாட் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ரூதர்போர்ட் தான் எங்களின் தோல்விக்கு காரணம் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில், கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.

t20 world cup indian national cricket team cricket Sherfane Rutherford 20 2024

இதில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே இழந்து தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு நியூசிலாந்து அணி தள்ளப்பட்டுள்ளது.

இந்த தோல்வி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேசுகையில், ஷெர்ஃபானே ரூதர்போர்ட் இன்னிங்ஸ் தான் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம். நிச்சயம் அவரின் இன்னிங்ஸ் அனைவரையும் வியக்க வைத்தது. எங்களுக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது என்றே கூறலாம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் நீண்ட பேட்டிங் வரிசை இந்த போட்டியில் பயனளித்துள்ளது.

நாங்கள் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்த அட்டாக்கிங் வாய்ப்பை தேர்வு செய்தோம். டி20 கிரிக்கெட்டில் சின்னச்சின்ன தவறுகளும் ஆட்டத்தை மாற்றிவிடும். நாங்கள் தேர்ந்தெடுத்த பின்னடைவை ஏற்படுத்தியது. சான்ட்னருக்கு கடைசி ஓவர் கொடுத்தது நம்பிக்கையால் தான். முதல் 12 ஓவர்கள் ஆட்டம் எங்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஒரு ஓவரில் 2 அல்லது 3 பந்துகளில் நிச்சயம் பெரிய ஷாட் போகும் என்று எண்ணியிருந்தேன்.

அதனால் சராசரிக்கும் அதிக ஸ்கோரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தேன். சூழலை ஒருபோதும் குறையாக சொல்ல கூடாது. 10 முதல் 15 ரன்கள் நிச்சயம் பெரிய வித்தியாசத்தை கொடுக்கும். அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்மார்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இதன் படிப்பினையை அடுத்த போட்டிகளில் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 13, 2024, 13:04 [IST]
Other articles published on Jun 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+