For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WI vs PAK: 66 வருட ரெக்கார்டை உடைத்த வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர்.. பாகிஸ்தான் மண்ணில் அபார சாதனை

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஜோமல் வாரிகன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார். 66 வருட சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார் ஜோமல் வாரிகன்.

இதற்கு முன் பாகிஸ்தான் மண்ணில் எந்த வெஸ்ட் இண்டீஸ் சுழற் பந்துவீச்சாளரும் 5 விக்கெட்களை வீழ்த்தியதில்லை. 1959 ஆம் ஆண்டு சோன்னி ரமதின் என்ற வெஸ்ட் இண்டீஸ் சுழற் பந்துவீச்சாளர் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதுவே ஒரு வெஸ்ட் இண்டீஸ் சுழற் பந்துவீச்சாளர் பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட் ஆக இருந்தது.

WI vs PAK 1st Test Jomel Warrican breaks 66 year old spin record in Pakistan

அந்த சாதனையை பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முறியடித்து இருக்கிறார் ஜோமல் வாரிகன். அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் அவர் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்த போட்டியில் அவர் 10 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 230 ரன்களை எடுத்தது. சவுது ஷகீல் 84 ரன்களும், முகமது ரிஸ்வான் 71 ரன்களும் எடுத்து இருந்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் சஜித் கான் 4 விக்கெட்களும், நோமன் அலி 5 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோமல் வாரிகன் 7 விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 251 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. சஜித் கான் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Sunday, January 19, 2025, 13:37 [IST]
Other articles published on Jan 19, 2025
English summary
WI vs PAK 1st Test: Jomel Warrican breaks 66 year old spin record in Pakistan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+