
மெகா வெற்றி
நேற்று (ஜூன்.26) இரவு செயின்ட் ஜார்ஜில் நடந்த தொடங்கிய முதல் டி20 போட்டியில் தனது வலிமையை நிரூபித்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வான் டெர் டூசன் 38 பந்துகளில் 56 ரன்கள் எடுக்க, டி காக் 37 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கியது. ஃபிளெட்சர் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க, மற்றொரு ஓப்பனர் எவின் லெவிஸ் பாரபட்சமின்றி 35 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். பிறகு க்றிஸ் கெயில் 24 பந்துகளில் 32 ரன்களும், ரஸல் 12 பந்துகளில் 23 ரன்களும் எடுக்க, ஜஸ்ட் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து மிரட்டலாக வெற்றிப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி
இந்நிலையில், ஒருநாள் கூட இடைவெளி இன்றி, இன்று (ஜூன்.27) இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய தென்னாப்பிரிக்கா அணியால், டி20 கிரிக்கெட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் (wk), கைரன் பொல்லார்ட் (c), ஆண்ட்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர், டுவைன் பிராவோ, ஃபேபியன் ஆலன், ஒபேட் மெக்காய், கெவின் சின்க்ளேர், லென்ட்ல் சிம்மன்ஸ், ஃபிடல் எட்வர்ட்ஸ் ஆகியோர் உள்ளனர்.

இன்றாவது வெல்லுமா?
தென்னாப்பிரிக்க அணியில், ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி கோக் (wk), டெம்பா பவுமா (c), வான் டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி ங்கிடி, லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் , ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, சிசாண்டா மாகலா, ஜார்ன் ஃபோர்டுயின், வியான் முல்டர், கைல் வெர்ரெய்ன், ஜேன்மேன் மாலன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

லைவ் எங்கே?
இந்திய நேரப்படி இரவு 11:30 மணிக்கும், உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கும் போட்டி தொடங்குகிறது. ஆனால், இப்போட்டி இந்தியாவில் ஒளிபரப்பப்படவில்லை. எனினும், Fancode app மற்றும் இணையதளத்தில் போட்டியை நேரடியாக பார்க்கலாம். அதுமட்டுமின்றி, நமது தமிழ் mykhel தளத்திலும் போட்டியின் ஸ்கோர் கார்டை லைவாக காணலாம்.


Click it and Unblock the Notifications