WI vs SA -தென்னாப்பிரிக்காவை சுளுக்கு எடுத்த வெஸ்ட் இண்டீஸ்.. Shamar Joseph 5 விக்கெட் வீழ்த்தினார்
Shamar Joseph : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சமர் ஜோசப் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்த போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு தென்னாப்பிரிக்க வீரர்களை திணறடித்தனர். தென்னாப்பிரிக்கா வீரர் டோனி டிசோசி விக்கெட்டை ஜேய்டன் சேல்ஸ் வீழ்த்தினார். அவருடைய பந்து ஸ்டெம்பில் பட்டு எகிறியது. இதை அடுத்து சமர் ஜோசப் தன்னுடைய அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தனி ஆளாக நின்று வெஸ்ட் இண்டீஸ் க்கு வெற்றியை பெற்று தந்து சமர் ஜோசப் உலகப் புகழ்பெற்றார். இதன் பிறகு காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடாமல் இருந்த சமர் ஜோசப் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பி இருக்கிறார். சமர் ஜோசப்பின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஏய்டன் மார்க்கரம் 14 ரன்களிலும் கேப்டன் பெவுமா டக் அவுட் ஆகியும் டேவிட் பெண்டிங்காம் 28 ரன்களில் கெயில் வெர்ரையின் 22 ரன்களிலும், கேசவ் மஹராஜ் டக்அவுட் ஆகியும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி 43 ஓவர் எதிர்கொண்ட நிலையில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தரப்பில் சமர் ஜோசப் 33 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோன்று ஜேய்டன் சேல்ஸ் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications