Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs USA: ஆறே மேட்ச்சில் சிக்ஸர் ரெக்கார்டை உடைத்து எறிந்த நிக்கோலஸ் பூரன்.. அதிக ரன் குவிப்பு

பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் மூன்று சிக்ஸர்கள் அடித்தார். அதன் மூலம் 12 ஆண்டுகளாக தொட முடியாமல் இருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார் பூரன். அவர் வெறும் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து இருந்தார்.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 10.5 ஓவரில் 129 ரன்கள் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அமெரிக்க அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு வீரர் ஷாய் ஹோப் 39 பந்துகளில் 82 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் எட்டு சிக்ஸர்கள் அடித்து இருந்தார். இந்த போட்டியின் முடிவில் நிக்கோலஸ் பூரன் ஒரே டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

T20 World Cup Indian national cricket team Cricket

கடந்த 2012 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் ஏழு போட்டிகளில் 16 சிக்ஸர்கள் அடித்து ஒரே டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து அதே வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 6 போட்டிகளில் 17 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

இதே பட்டியலில் மூன்றாவது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் இருக்கிறார். 2012 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் 15 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அதே 2012 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் 15 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இவர்கள் இருவரும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

இது மட்டும் இன்றி ஒரே டி20 உலகக் கோப்பை இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரன் ஏற்கனவே மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். தற்போது ஷாய் ஹோப் அமெரிக்க அணிக்கு எதிரான 8 சிக்ஸ் அடித்து மூன்றாவது இடத்தை பூரனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 6 போட்டிகளில் 227 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 98 ரன்கள் அடித்துள்ளார்.

Story first published: Saturday, June 22, 2024, 12:53 [IST]
Other articles published on Jun 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+