Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாயைப்பிளக்க வைக்கும் செயல்.. பயிற்சியின் போது ரிஷப் பண்ட் காட்டிய அசத்தல் ஃபிட்னஸ் - வைரல் வீடியோ!

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக இந்திய வீரர் ரிஷப் பண்ட் செய்யும் அசரவைக்கும் உடற்பயிற்சி வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது.

 இந்திய அணி

இந்திய அணி

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி கடந்த சில வருடங்களாக மிகவும் பலமான ஒன்றாக உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என வீரர்கள் ஃபுல் ஃபார்மில் உள்ளனர். கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய, இங்கிலாந்து தொடர்கள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும். அதில் இளம் வீரர் ரிஷப் பண்ட்-ன் காட்டிய சிறப்பான ஆட்டம் இந்திய அணியை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றது.

 அதிரடி ஃபார்ம்

அதிரடி ஃபார்ம்

ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 274 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 68.50 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி தொடரில் 270 ரன்கள் அடித்தார். அந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 662 ரன்களை விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 41.37 ஆகும்.

 பண்ட்-ன் ஃபிட்னஸ்

பண்ட்-ன் ஃபிட்னஸ்

இந்நிலையில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பண்ட் வெறித்தனமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஜிம்மில் தலைகீழாக நின்ற ரிஷப் பண்ட் நீண்ட நேரம் அப்படியே நடந்துள்ளார். தனது ஃபிட்னஸை நிரூபிப்பதற்காக அவர் நீண்ட நேரம் அதுபோன்று தலைகீழாக நடந்துள்ளார். இதனை அருகில் இருந்து ஒருவர் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துள்ளார். முன்னதாக பிசிசிஐ வெளியிட்ட வீடியோவிலும் ரிஷப் பண்ட் முரட்டுத்தனமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த வீடியோக்கள் மூலம் அவர் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார் என தெரிகிறது.

 இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் தற்போது மும்பையில் 14 நாட்கள் பிசிசிஐ-ன் பயோ பபுளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வரும் ஜூன் 2ம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்று அங்கும் 10 நாட்கள் குவாரண்டைனில் இருக்க உள்ளனர். அவர்கள் குவாரண்டைன் காலத்திலேயே பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, May 28, 2021, 17:47 [IST]
Other articles published on May 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+