இந்திய அணிக்கு குரல் கொடுத்த சாக்ஷி, ஜிவா, அனுஷ்கா.... கியூட் படங்கள்!
Recommended Video

பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 3-வது டி-20 போட்டியில் வென்று தொடரை வென்றபோது, கேப்டன் கூல் தோனியின் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா, கேப்டன் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா உள்ளிட்டோர் மைதானத்தில் இருந்து குரல் கொடுத்து ஊக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பாக சாக்ஷி பல்வேறு படங்களை சமூகதளங்களில் வெளியிட்டுள்ளார்.

படத்தில், மகள் ஜிவாவுடன் சாக்ஷி மற்றும் அனுஷ்கா உள்ளனர். அவர்களுடன் ஆஷிஷ் நெஹ்ராவின் மனைவி ருஷ்மா, ஷிகார் தவானின் மகள்கள் அலியா, ரியா, குருனால் பாண்டயாவின் மனைவி பன்குரி சர்மாவும் உள்ளனர்.
அனுஷ்கா, ருஷ்மா உள்ளிட்டோர் காலரியில் இருந்து பார்க்கும் மற்றொரு படத்தையும் சாக்ஷி வெளியிட்டுள்ளார்.
இந்த தொடர் வெற்றிக்குப் பிறகு டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "மிகவும் திறமையான நமது அணி வீரர்களுடன் இணைந்து இந்த முக்கியமான போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி பெற்றது அதைவிட மகிழ்ச்சி அளிக்கிறது" என விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பரில் கோஹ்லியை திருமணம் செய்தார் நடிகை அனுஷ்கா சர்மா. தென்னாப்பிரிக்காவுக்கு கோஹ்லியுடன் சென்ற அவர், ஐபிஎல் போட்டிகளின்போது மைதானத்துக்கு வந்த கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு குரல் கொடுத்தார்.
இரண்டு தினங்களுக்கு முன் நடந்த தோனியின் 37வது பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் சாக்ஷியுடன் அனுஷ்கா கலந்து கொண்டார்.
ஷாருக்கான், காத்ரினா கைப் ஆகியோருடன் நடக்கும் ஜூரோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார் அனுஷ்கா.


Click it and Unblock the Notifications