Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனிக்கு கிடைச்ச கிப்ட்டை பாத்தீங்களா? யாருக்குமே இதுமாதிரி கிடைச்சிருக்காது

சென்னை:சென்னை அணியின் கேப்டன் தல தோனிக்கு அவரது மனைவி சாக்ஷி சர்ப்ரைசாக ஒரு பரிசு கொடுத்து அசத்தி உள்ளார்.

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. சூதாட்ட புகார் தொடர்பாக 2 ஆண்டு தடைக்கு பின்னர் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றது.

Wife witness says congratulations on dhonis victory centennial in ipl series 2019

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி கலக்கி வருகிறது. அனைத்து அணிகளையும் பின்னுக்கு தள்ளி, ஜம்மென்று சென்னை அணி முதல் இடத்தில் இருந்து வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரிலும் எதிர்பார்த்தற்கு மாறாக அணி சிறப்பாக ஆடி வருகிறது. இந்த முறையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அந்த அணி சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி 100 போட்டிகளுக்கு மேல் அணியை வெற்றி பெற செய்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக தோனியின் மனைவி சாக்ஷி தோனி 100 விசில்கள் அடங்கிய ஒரு நினைவு பரிசை வழங்கிய ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

Story first published: Friday, April 26, 2019, 10:29 [IST]
Other articles published on Apr 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+