Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் மகன் இந்தியாவுக்கு விளையாட முடியுமா... இதுவரை சாதித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா!

Recommended Video

சச்சின் மகனும் களமிறங்கிட்டார்...இதற்கு முன் கலக்கிய தந்தை பட்டியல்- வீடியோ

டெல்லி: 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடி பின்னர் சீனியர் அணியிலும் கலக்கியவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனும் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கைக்கு அடுத்த மாதம் செல்லும் ஜூனியர் அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அதையடுத்து அவர் தேசிய அணியில் சேருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

1988ல் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி நடந்தது. இந்தாண்டு நடந்த உலகக் கோப்பையை தவிர்த்து இதுவரை, 117 பேர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர்.

அதில், 34 பேர் தான் சீனியர் அணிக்காக விளையாடியுள்ளனர். அதிலும் 14 பேர் மட்டுமே 50க்கு மேற்பட்ட போட்டிகளில் சீனியர் அணிக்காக விளையாடி உள்ளனர்.

சேவாக் முதல் கோஹ்லி வரை

சேவாக் முதல் கோஹ்லி வரை

அதிலும் வெகு சிலரே, சீனியர் அணியில் நீண்ட காலம் விளையாடியுள்ளனர். யுவராஜ் சிங், விராட் கோஹ்லி, முகமது கைப், ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா, சத்தேஸ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, வீரேந்திர சேவாக், ஷிகார் தவான், சுரேஷ் ரெய்னா போன்றோர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர்கள், விளையாடி வருபவர்கள்.

ஒருவருக்கே வாய்ப்பு

ஒருவருக்கே வாய்ப்பு

2012ல் நடந்த உலகக் கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இந்த 6 ஆண்டுகளில், ஜூனியர் அணிக்காக விளையாடிய ஒரு வீரர் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 6 பேர் விளையாடியுள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு

12 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு

19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடிய ஸ்டார்ட் பின்னி, பைஸ் பாசல் ஆகியோருக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அர்ஜூன் சாதிப்பாரா

அர்ஜூன் சாதிப்பாரா

அதே நேரத்தில் இந்தாண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய பல வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளனர். சச்சின் மகன் அர்ஜூன் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே கலக்கி வருகிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்றுள்ளது, சீனியர் அணிக்கு விளையாடுவதற்கான முதல் படியாகவே பார்க்கப்படுகிறது. சாதிக்க வேண்டியது அர்ஜூன் கையில்தான் உள்ளது.

Story first published: Friday, June 8, 2018, 12:50 [IST]
Other articles published on Jun 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+