Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் மிரட்டிய இங்கிலாந்து.. ஒயிட் வாஷ் ஆனது ஆஸ்திரேலியா!

Recommended Video

5வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து- வீடியோ

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வாஷ் அவுட் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

will australia taste its first victory

டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி ,முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு எந்த விதமான நெருக்கடியையும் இந்த தொடரில் இது வரை கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு சொதப்பலாக ஆடியது.

அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே இங்கிலாந்து அணியால் துவம்சம் செய்யப்பட்டது. பேட்டிங் வரிசையில் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் ஆரான் பின்ச் ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக ஆடியுள்ளார்கள். பந்து வீச்சை பொறுத்தவரை பில்லி ஸ்டான்லேக் சிறப்பாக வீசியுள்ளார்.

முதல் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்திலும் ,இரண்டாவது போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்திலும் மற்றும் நான்காவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து இத்தொடரில் குவித்த 481 ரன்கள் ஒரு உலக சாதனையாகும். ஐந்தாவது போட்டி மான்சேஸ்டெர் நகரில் நடைபெற்றது. இன்றைய போட்டியிலும் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன்பின் ஆடிய இங்கிலாந்து 48.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு இலக்கை அடைந்தது. ஜோஸ் பட்லர் இந்த போட்டியிலு அதிரடியாக 110 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Story first published: Monday, June 25, 2018, 16:49 [IST]
Other articles published on Jun 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+