விராட் கோலியை பிளான் பண்ணிதான் தூக்கணும்... பாட் கமின்ஸ் அதிரடி
மெல்போர்ன் : இந்திய கேப்டன் விராட் கோலியை திட்டமிட்டே அவுட்டாக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பேஸ்புக் லைவ் சாட்டில் பேசிய பாட் கமின்ஸ், எச்சிலுக்கு தடை விதிக்கப்பட்டால், டெஸ்ட் போட்டிகளில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வது இயலாது என்று கூறியுள்ளார்.
மேலும் பந்துகளை ஷைன் செய்யும் உரிமையை பௌலர்கள் இழப்பது அவமானம் என்றும் எச்சிலை பயன்படுத்துவதற்கு உடனடியாக மாற்று வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தரவரிசையில் முதலிடம்
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ், எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளவர். தன்னுடைய அணியின் சிறப்பான வெற்றிகளுக்கு தானும் காரணமாக இருப்பவர். இவர் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். தற்போது கொரோனா காரணமாக வீட்டில் முடங்கியுள்ள கமின்ஸ், பேஸ்புக் நேரலையில் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

மாற்று கண்டுபிடிக்க வேண்டுகோள்
பந்துகளை ஷைன் செய்யும் உரிமையை குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்தும் உரிமையை பௌலர்கள் இழப்பது அவமானம் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் எச்சிலை பயன்படுத்துவது வைரஸ் பரவ வழிவகுக்கும் என்பதால், எச்சிலுக்கு மாற்றை கண்டுபிடிக்க கிரிக்கெட் நிர்வாகிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாதுகாக்க கோரிக்கை
டெஸ்ட் போட்டிகளில் பந்துகளை ஷைன் செய்து ரிவர்ஸ் ஸ்விங்கை பௌலர்கள் செய்வது வழக்கம். அது முக்கியமானதும் கூட என்று கூறியுள்ள கமின்ஸ், டெஸ்ட் போட்டிகளில் அது மிகப்பெரிய அங்கமாக உள்ள நிலையில், அதை பாதுகாக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எது எப்படி இருந்தாலும் பந்தை ஷைன் செய்து அதை ஸ்விங் செய்ய வைப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோலி குறித்து கமின்ஸ்
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், விராட் கோலி உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று கமின்ஸ் தெரிவித்துள்ளார். அவரை போட்டியில் வீழ்த்துவதற்கு திட்டமிட்டே பௌலிங்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications