Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹசின் ஜகான் புகார் எதிரொலி.. ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்கப்படுகிறாரா முகமது ஷமி?

டெல்லி: ஹசின் ஜகான் கொடுத்த தொடர் புகார்களின் காரணமாக முகமது ஷமி ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். முதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.

ஷமி சூதாட்டம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஷமி மீது போலீசில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

மோசமான பிரிவு

மோசமான பிரிவு

தற்போது முகமது ஷமி மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. கொலை முயற்சி, கற்பழிப்பு, சூதாட்டம் ஆகிய பிரிவுகளில் ஷமி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஷமி கைது செய்யப்பட்டால் ஜாமீனில் வர முடியாது. இதனால் அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

விசாரணை

விசாரணை

ஷமி மீது சூதாட்ட புகாரும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரை தற்போது நீரஜ் குமார் என்பவர் விசாரித்து வருகிறார். நீரஜ் குமார் பிசிசிஐ அமைத்து இருக்கும் சூதாட்டத்திற்கு எதிரான குழுவின் தலைவர். இவர் இன்னும் இரண்டு வாரத்தில் ஷமி குறித்த அறிக்கையை சமர்பிப்பார்.

விளையாடுவாரா?

விளையாடுவாரா?

இவரது பிசிசிஐ ஒப்பந்தம் நீக்கப்பட்டு இருப்பதால், ஐபிஎல் போட்டியில் விளையாடுவதும் சந்தேகம் ஆகி உள்ளது. அவர் தற்போது டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். இந்த ஐபிஎல் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகிகள் பேட்டி அளித்து இருந்தார்கள்.

ராஜீவ் சுக்லா விளக்கம்

ராஜீவ் சுக்லா விளக்கம்

இதற்கு ஐபிஎல் நிறுவன தலைவர் ராஜீவ் சுக்லா பதில் அளித்துள்ளார். அதில் ''ஷமி தவறு செய்தாரா, இல்லையா என்று கூற முடியாது. அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறு செய்து இருந்தாலும் எங்களுக்கு பெரிய பிரச்சனை இல்லை.அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தால் அதை பிசிசிஐ பார்த்துக் கொள்ளும். இரண்டு வாரத்தில் பிசிசிஐ அறிக்கை சமர்பித்த பின் இதில் நாங்கள் முடிவெடுப்போம்'' என்றுள்ளார்.

Story first published: Thursday, March 22, 2018, 16:53 [IST]
Other articles published on Mar 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+