இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்.. சென்னையில் நடக்குமா, நடக்காதா?
சென்னை: இலங்கை தொடருக்குப் பிறகு, இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான போட்டிகள் நடக்க உள்ளது. இதில் முதல் போட்டி, சென்னையில் நடக்க உள்ளது.
இந்தப் போட்டி மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடத்துவதற்கு, ரூ. 1.5 கோடி ரூபாய் தர வேண்டும் என, பிசிசிஐயிடம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கேட்டுள்ளது. பணம் கிடைக்குமா, போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் விளையாடி வருகிறது.
இந்தப் போட்டிகள் முடிந்த உடன், ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு வருகிறது. 5 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்கள் நடக்க உள்ளன.

முதல் ஒரு நாள் போட்டி
முதல் ஒருதினப் போட்டி, சென்னையில், செப்டம்பர், 17ம் தேதி நடக்க உள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணி, செப்டம்பர், 8ம் தேதியே சென்னைக்கு வருகிறது. இங்கு பயிற்சி
மேற்கொள்வதுடன், சில பயிற்சி ஆட்டங்களிலும் விளையாட உள்ளது.

3 நாள் செலவு
வழக்கமாக, ஒரு ஒருதினப் போட்டி நடந்தால், போட்டி நடக்கும் நாள், முந்தைய மற்றும் பிந்தைய நாட்கள் என, மூன்று நாட்களாகும் செலவை, அந்த மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்க
வேண்டும். ஆனால், செப்டம்பர் 8ம் தேதியே வருவதுடன், பல பயிற்சி ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா பங்கேற்க உள்ளதால், அதிகம் செலவாகிறது.

ஒரு நாளைக்கு 20 லட்சம் தேவை
ஒரு நாளைக்கு, 20 லட்சம் ரூபாய் என, ரூ.1.5 கோடியை தர வேண்டும் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

ஓசியில் நடத்த முடியாதா!
பயிற்சி ஆட்டங்களை தனியார் மைதானங்களில் நடத்தலாமே என, பிசிசிஐ கூறியுள்ளது. அதாவது ஓசியில். ஆனால், இதற்கு தமிழ்நாடு சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடக்குமா, நடக்காதா!
அதனால், ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டி சென்னையில் நடக்குமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications