Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை சூப்பர் கிங்ஸ்-கேப் கோப்ராஸ் அணிகள் இன்று மோதல்

சென்னை: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கேப் கோப்ராஸ் அணியுடன் மோதுகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த சென்னை அணி இன்றாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3வது சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியில் மும்பையுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில் அதே சேப்பாக்கம் மைதானத்தில் இன்று, தென் ஆப்பிரிக்காவின் கேப் கோப்ராஸ் அணியுடன் மோதுகிறது.

கேப் கேப்ராஸ் அணி ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் வெற்றியை பதிவு செய்யாமல் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னையின் நம்பிக்கை நட்சத்திரங்களான முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் ஆகியோர் தகுந்த முறையில் சோபிக்கவில்லை.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இவர்கள் 3 பேரின் உழைப்புடன் துவக்க ஆட்டக்காரர் மைக் ஹசியின் பங்கும் இணையும் பட்சத்தில் போட்டியில் சென்னை அணியால் எளிதான வெற்றியை பதிவு செய்ய முடியும். மேலும் இறுதிக் கட்டத்தில் பந்துவீச்சிலும் சென்னை அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அஷ்வின், போலிங்கர், ஜகாதி ஆகியோர் இணைந்து எதிரணிக்கு ரன் குவிப்பதற்கு நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் சென்னையின் வெற்றி உறுதியாகும். கேப் கோப்ராஸ் அணியை பொறுத்த வரையில், கிப்ஸ் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளார்.

கிப்ஸ் தவிர ஒவாஸ் ஷா, ஜஸ்டின் ஒன்டாங் ஆகியோரும் விரைந்து ரன்களை சேர்ப்பவர்களாக கேப் கோப்ராஸ் அணியில் உள்ளனர். கேப் கோப்ராஸ் அணியில் ஸ்டைன், லாங்கிவெல்ட் ஆகியோரின் வேகங்களில் சென்னை அணியினர் தாக்கு பிடித்து ரன் சேர்க்க வேண்டிய சாவல் காத்திருக்கிறது.

பீட்டர்சனின் சுழலில் சென்னை அணி சிக்கி, ரன் குவிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், 5வது பந்துவீச்சாளர் இல்லாமல் திணறும் கேப் கோப்ராஸ் அணியின் பலவீனம், இன்று சென்னை அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. ஆடுகளத்தை பொறுத்தவரை கடினமாக காணப்படுவதால், பவுன்சர் பந்துகளை அதிகளவில் எதிர்பார்க்கலாம்.

இரவு 8 மணி்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப் கோப்ராஸ் இடையேயான போட்டி நடக்க உள்ளது.

Story first published: Wednesday, May 30, 2012, 13:08 [IST]
Other articles published on May 30, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+