Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கட்டை விரல் காயம் என்னாச்சு…? உலக கோப்பையில் தோனி விளையாடுவாரா? அணி நிர்வாகம் புது தகவல்

Recommended Video

World Cup 2019 - கட்டை விரலில் காயம்... அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா ?

லண்டன்: கட்டை விரல் காயம் அடைந்துள்ள தோனி அடுத்த ஆட்டத்தில், ஆடுவாரா இல்லையா என்று அணி நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இங்கிலாந்து உலக கோப்பை தொடரில் இந்தியா சிறப்பாக ஆடி செமி பைனலுக்குள் நுழைந்திருக்கிறது. ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 31 ரன்களில் தோல்வியை தழுவியது. இதுவே இத்தொடரில் இந்திய அணி பெற்ற முதல் தோல்வி அது மட்டுமே ஆகும்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனியின் கட்டை விரலில் ரத்தம் வடிவதையும் அதனை தோனி உறிஞ்சி வெளியே உமிழ்ந்த புகைப்படமும் வெளியாக ரசிகர்கள் ஏகத்துக்கும் அதிர்ந்தனர். அடுத்தடுத்த போட்டிகளில் அவரின் முக்கியத்தும் தேவை என்பதால் காயம் குறித்து இந்திய அணி நிர்வாகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

போதிய நேரங்களில் பயிற்சியின் போது தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனாலும், ஓய்வை ஓரங்கட்டி வைத்துவிட்டு, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கினார். அப்போட்டியில் அவ்வப்போது கீப்பிங் பொறுப்பை ரிஷப் பன்ட்டிடம் கொடுத்துவிட்டு டிரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்று வந்ததை ரசிகர்கள் தொலைக்காட்சியில் கண்டனர்.

இலங்கையுடன் சந்திப்பு

இலங்கையுடன் சந்திப்பு

இந் நிலையில், இலங்கைக்கு எதிராக இந்தியாவின் கடைசி லீக் போட்டி நாளை நடக்கிறது. தற்போது, அந்த போட்டியிலும் அரையிறுதியிலும் தோனி ஆடுவாரா? அவரது காயம் எந்த மாதிரியான நிலையில் உள்ளது? என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

தோனியின் மனநிலை

தோனியின் மனநிலை

அதில், கூறப்பட்டிருப்பதாவது: 300 ஒருநாள் போட்டிகளுக்கும் மேல் ஆடியுள்ள தோனி வரும் போட்டிகளில் எப்படி செயல்பட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார். காயங்களையும் வலிகளையும் அவர் பொருட்படுத்த வில்லை.

குணமாகி விட்டது

குணமாகி விட்டது

இருப்பினும் அவரது காயம் நன்கு ஆறிவிட்டது. அடுத்த போட்டிகளில் ஆட நிர்வாகம் சம்மதித்துள்ளது. ஆனால், தோனியின் முடிவு இறுதியானது என்று கூறப்பட்டிருக்கிறது.

பழைய பேட்டி

பழைய பேட்டி

முன்னொரு முறை தோனி அளித்த பேட்டியை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அதில் அவர் கூறியிருந்த செய்தி ரொம்ப முக்கியமானது. என்னால் 100 சதவீதம் குணமடையும் வரை காத்திருக்க முடியும்.

பொறுமை உள்ளது

பொறுமை உள்ளது

அது ஒருநாளோ அல்லது 5 ஆண்டுகளோ? அந்த பொறுமை என்னிடம் உள்ளது. என்னால் அதனை செய்யவும் முடியும். ஆனால், முழு உடற்தகுதி இல்லாமல் நான் எந்த போட்டியிலும் களமிறங்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

ஆதலால், குணமடையும் முன்பே அடுத்தடுத்த போட்டியில் தோனியை நிர்வாகம் ஆடுவதற்கு பணித்தாலும், அவரின் உடல்நிலை பொறுத்து அவரே முடிவெடுப்பார் என தெரிகிறது. எனவே, அவரது முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Story first published: Friday, July 5, 2019, 19:57 [IST]
Other articles published on Jul 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+