Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தாவுக்கு பாக். அணி வந்தால் ஈடன் கார்டன் மைதானத்தில் "பிட்ச்" இருக்காது.. புது மிரட்டல்

கொல்கத்தா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கொல்கத்தாவுக்கு வரக் கூடாது. ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடக் கூடாது. மீறி வந்தால் ஈடன் கார்டன் மைதானததின் பிட்ச்சை சேதப்படுத்துவோம் என்று இந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.

பதன்கோட் தாக்குதலைக் காரணம் காட்டி தரம்சலாவில் மார்ச் 19ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை டி 20 போட்டிக்கு பாதுகாப்பு தருவது கஷ்டம் என்று இமாச்சலப் பிரதேச அரசு கூறி விட்டது.

இதையடுத்து அந்தப் போட்டியை தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு மாற்றியுள்ளது ஐசிசி. மேலும் அங்கு தான் தனது வார்ம் அப் போட்டிகளையும் பாகிஸ்தான் ஆடவுள்ளது.

புது மிரட்டல்

புது மிரட்டல்

இந்த நிலையில் கொல்கத்தாவில் பாகிஸ்தான் அணி விளையாடுவதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு என்ற அமைப்பு பாகிஸ்தான் அணியை கொல்கத்தாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டியுள்ளது.

அவமரியாதை

அவமரியாதை

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான வீரேஷ் சன்டில்யா கூறுகையில் இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடுவதை அனுமதிப்பது என்பது நமக்காக உயிரைத் தியாகம் செய்த ராணுவத்தினரை அவமதிக்கும் செயலாகும்.

பிட்ச்சைப் பிச்சுப்புடுவோம்

பிட்ச்சைப் பிச்சுப்புடுவோம்

பாகிஸ்தான் அணி கொல்கத்தாவில் விளையாடக் கூடாது. மீறி விளையாட அனுமதித்தால் மைதானத்தின் பிட்ச்சை சேதப்படுத்துவோம். விளையாட அனுமதிக்க மாட்டோம்.

மும்பை - பதன்கோட் தாக்குதல்

மும்பை - பதன்கோட் தாக்குதல்

மும்பை, பதன்கோட் தாக்குதலுக்குக் காரணமானவர்கள், சமீபத்தில் நடந்த பாம்பூர் தாக்குதல் ஆகியவற்றுக்குக் காரணமானவர்கள் பாகிஸ்தானில்தான் உள்ளனர். அவர்களை ஒப்படைக்கும் வரை இந்தியாவில் பாகிஸ்தான் விளையாட அனுமதிக்க முடியாது.

அறிவே இல்லாத பிசிசிஐ

அறிவே இல்லாத பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவே இல்லை. நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களின் மனைவியருக்கு பிசிசிஐ தரும் மரியாதை இதுதானா? தங்களது தலைவர்களை, வாழ்க்கையை தியாகம் செய்து விட்டு வாழும் அவர்களை இப்படித்தான் பிசிசிஐ கெளரவிக்குமா?

விட மாட்டோம்

விட மாட்டோம்

பாகிஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு வரக் கூடாது. அதற்காக தீவிரமாகப் போராடுவோம். விமான நிலையம் முதல் மைதானம் வரை போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

Story first published: Thursday, March 10, 2016, 10:41 [IST]
Other articles published on Mar 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+