Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக்கின் 14 ஆண்டுகள் சோகம்..!! ஆசையை நிறைவேற்றுவாரா தோனி..?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

சென்னை: அஸ்வினுக்கு முன்பு தமிழக கிரிக்கெட்டின் அடையாளமாக திகழ்ந்தவர் தினேஷ் கார்த்திக். தோனிக்கு முன்பே இந்திய அணிக்காக விளையாடியவர்.

ஆனால், தோனியின் அசுர வளர்ச்சியால் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கால் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை. ஆனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, தனது திறமையையும் தினேஷ் கார்த்திக் நிரூபித்து வந்துள்ளார்.

தமிழ்நாட்டு கிரிக்கெட்டின் அடையாளமாக இருக்கும் தினேஷ் கார்த்திக், மனதில் 14 ஆண்டுகளாக நீங்காத குறை ஒன்று உள்ளது.

6 அணிகள்

6 அணிகள்

சென்னையில் பிறந்து, வளர்ந்து, தமிழ்நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாடி, கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் இதுவரை ஒரு முறை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது இல்லை. இருக்கும் 10 அணிகளில் தினேஷ் கார்த்திக், பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத் மற்றும் கொல்கத்தா என 6 அணிகளில் விளையாடிவிட்டார்.

14 ஆண்டு கனவு

14 ஆண்டு கனவு

ஒவ்வொரு முறையும் ஏலத்தில் சென்னை அணி தம்மை எடுக்காதா என ஏங்கி காத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு ஏமாற்றமே மிஞ்சும். இதனால் ஒரு முறை வெளிப்படையாகவே சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையை கூறிவிட்டார். இலங்கையில் நிதாஷ் கோப்பையில் தனி ஆளாக நின்று வெற்றியையும் தேடி கொடுத்த பின்பு வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார்.

ரூ.2 கோடி

ரூ.2 கோடி

ஆனால் கொல்கத்தா அணி அவரை கொத்தி கொண்டு சென்றது. இதனால் வரும் மெகா ஏலத்திலாவது சென்னை அணி அவரை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தினேஷ் கார்த்திக்கின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது பிளஸ் பாயிண்ட், ஆனால் அவருக்கு வயது 36 ஆகி விட்டது. இது நிச்சயம் மைனஸ் தான்.

Recommended Video

Rishabh Pant-க்கு வாய்ப்பு கொடுத்த BCCI.. Dhoni-ன் வார்த்தைகளை நினைவுகூரும் ரசிகர்கள்
சென்னை அணி

சென்னை அணி

வயதை காரணம் காட்டி பல அணிகள் தினேஷ் கார்த்திக்கை எடுக்க ஆர்வம் காட்டாது.ஆனால் வயதான வீரர்களை விரும்பி எடுப்பது சென்னைக்கு பிடிக்கும் என்பதால், இம்முறை நிச்சயம் தினேஷ் கார்த்திக்கை குறிவைக்க வேண்டும். அப்படி செய்தால் 2 கோடி ரூபாய்க்கே தினேஷ் கார்த்திக் சென்னை அணிக்கு கிடைத்துவிடுவார். அவரை வைத்து நடுவரிசையை பலப்படுத்தலாம். தினேஷ் கார்த்திக்கின் ஆசையை நிறைவேற்றுவாரா தோனி? 12ஆம் தேதி விடை தெரிந்துவிடும்.

Story first published: Wednesday, February 2, 2022, 16:28 [IST]
Other articles published on Feb 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+