Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அச்சுறுத்தும் 'டியூக்'.. அசந்தா காலி - 'சொய்ங் சொய்ங்' பந்துகளை சமாளிக்குமா இந்தியா?

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில், இந்திய அணியை அச்சுறுத்தக் காத்திருக்கிறது டியூக் பந்துகள்.

வெளிநாட்டு கிரிக்கெட் தொடர் என்றாலே, முதலில் 'ஹப்பாடா' என்று திருப்தியடைவது டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் தான். குறிப்பாக, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா சீரிஸ் என்றால் குஷி தான்.

காரணம் பிட்ச். நம் நாட்டின் ஸ்லோர் அண்ட் ஸ்பின் பிட்சுகளுக்கு எதிராக 'மார்க் ஆன்டணி' மோடில் இருக்கும் பிட்சுகள் அவை.

 பாப்பா விளையாட்டு

பாப்பா விளையாட்டு

நம் ஊரில் சுழற்றி சுழற்றி அடிக்கும் சூப்பர் ஸ்டார்கள், அங்கே எப்படி பந்துகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. இன்னும் சொல்லப்போனால், அது ஒரு போதை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஓவரையும், ஒவ்வொரு பந்தையும் ரோஹித்தோ, கோலியோ, ரிஷப் பண்ட்டோ எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பார்ப்பது ஒரு போதை. கிரிக்கெட்டில் அந்த சுகத்துக்கு வேறேதும் ஈடாகாது. இந்த டி20... ஓவருக்கு 4 சிக்ஸ் என்பதெல்லாம் பாப்பாக்கள் விளையாட்டு.

 பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

அப்படியொரு கடினமான, சவால் நிறைந்த ஆக்ரோஷமான தொடரை தான் இந்திய ரசிகர்கள் அடுத்து சந்திக்கவிருக்கிறார்கள். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக, அடுத்த மாதம் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறி இருப்பதால், ரசிகர்கள் இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

 இங்கிலாந்து தயாரிப்பு

இங்கிலாந்து தயாரிப்பு

இத்தொடரில், இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கப் போகும் மற்றொரு முக்கிய காரணி 'டியூக்' பந்துகள். ஆம்! இங்கிலாந்தில் பாரம்பரியம் பாரம்பரியமாக டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படுவது டியூக் பந்துகள் தான். இந்த பந்துகள் அனைத்தும் இங்கிலாந்திலேயே தயாரிக்கப்படுகிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளில், இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீசும் தான் இந்த 'டியூக்' பந்துகளை பயன்படுத்துகிறார்கள்.

 க்ரிப் கிடைக்காது

க்ரிப் கிடைக்காது

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் கூக்கபுரா, டியூக் பந்துகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனா, இதில் பெரிய வித்தியாசமே stitching-ல் இருக்கிறது. டியூக் பந்தின் stitching... அதாவது தையல், இங்கிலாந்து பவுலர்களின் பாணிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருக்கும். டியூக் பந்து முழுக்க வேகப்பந்து வீச்சு சப்போர்ட் பண்ணும் குணம் கொண்டது. ஆனால், 50 ஓவர் வரை தான் தாக்குப்பிடிக்கும். ஸ்பின்னர்களுக்கு Grip கிடைக்குறது ரொம்ப கஷ்டம். எனவே, அடிக்கடி பந்துகளை மாற்றும் நிலை கேப்டனுக்கு ஏற்படலாம். இது பாஸ்ட் பவுலர்களுக்கு சாதமாக அமையலாம். ஏனெனில், புதிய பந்தில் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இரண்டும் அட்டகாசமாக இருக்கும்.

 ரோஹித், கோலி

ரோஹித், கோலி

ஸோ, ஒட்டுமொத்தமாக பார்க்கையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக, எந்தவித பயிற்சிப் போட்டியும் இன்றி, நேரடியாக களம் காணும் இந்திய வீரர்களுக்கு, இங்கிலாந்தின் ஆஸ்தான டியூக் பந்துகள் மேலும் பாதகமாக அமையலாம். குறிப்பாக, ரோஹித் போன்று அதிகம் பேடில் பந்துகளை வாங்கும் பேட்ஸ்மேன்களுக்கு இத்தொடர் மெகா சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Wednesday, May 19, 2021, 22:24 [IST]
Other articles published on May 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+