For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இதை" என்ன பண்ணலாம்.. டி20 உலகக் கோப்பை தலைவிதி.. நாளை முடிவெடுக்க ஐசிசி தீர்மானம்

டெல்லி: டி20 உலகக் கோப்பைப் போட்டியின் தலைவிதி என்ன என்பது நாளை தெரிய வரும். இதுதொடர்பாக நாளை முடிவெடுக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தால் ஸ்தம்பித்துப் போயுள்ள பலவற்றில் கிரிக்கெட்டும் ஒன்று. குறிப்பாக டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவது தொடர்பாக பெரும் இழுபறியும் குழப்பமும் நிலவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்தப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாளை முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் சாத்தியம் மிக மிக குறைவு என்பதால் போட்டியை நடத்த முடியாத நிலையே இப்போது வரை உள்ளது.

மரியாதையா நீங்களே ஒத்துக்கங்க.. இல்லாட்டி பெயரைச் சொல்லிருவேன்.. சமி அதிரடிமரியாதையா நீங்களே ஒத்துக்கங்க.. இல்லாட்டி பெயரைச் சொல்லிருவேன்.. சமி அதிரடி

என்ன செய்யலாம்

என்ன செய்யலாம்

இதுதொடர்பாக நடந்த கடைசி ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் குறித்த இமெயில்கள் லீக் ஆகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் திட்டவட்டமான முடிவை எடுக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாம். எனவே டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுமா இல்லையா என்பது நாளை நிச்சயம் தெரிய வரும்.

நடக்காட்டி என்ன பண்றது

நடக்காட்டி என்ன பண்றது

இதற்கிடையே, ஆஸ்திரேலியா தொடர் ஒத்திப் போடப்பட்டால் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிட்டுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியும் ஒத்திப் போடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு முதலில் ஆஸ்திரேலியா போட்டி குறித்த முடிவு தெரியட்டும். பிறகு எங்களது முடிவை சொல்கிறோம் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் தமால் கூறியுள்ளார்.

பிசிசிஐ கருத்து இதுதான்

பிசிசிஐ கருத்து இதுதான்

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆஸ்திரேலியா போட்டி குறித்து முதலில் தெரிய வேண்டும். ஒரு வேளை ஆஸ்திரேலியா போட்டியை அடுத்த ஆண்டுக்கு ஒத்திப் போட்டு அதை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்துவதா அல்லது இந்தியப் போட்டியை 2022க்கு ஒத்திப் போட்டு அதை ஆஸ்திரேலியா நடத்துவதா என்பதெல்லாம் ஐசிசி முடிவுக்குப் பிறகு யோசிக்க வேண்டியவை. முதலில் ஐசிசி முடிவெடுக்கட்டும் என்றார் அவர்.

 சேர்மன் கங்குலி?

சேர்மன் கங்குலி?

நாளை எடுக்கப்படவுள்ள இன்னொரு முக்கிய முடிவு ஐசிசிக்கு அடுத்த சேர்மன் யார் என்பது. தற்போதைய சேர்மன் சஷாங்க் மனோகர் பதவி முடியப் போகிறது. அடுத்த சேர்மன் யார் என்பதையும் முடிவு செய்ய வேண்டியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த காலின் கிரேவ்ஸ் பெயர் இதில் பலமாக அடிபடுகிறது. அதேசமயம், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மணி ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

Story first published: Tuesday, June 9, 2020, 20:34 [IST]
Other articles published on Jun 9, 2020
English summary
ICC will be hoping to end the impasse surrounding the future of this year's T20 World Cup Tommorrow
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X