Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த உலக கோப்பை தொடர்தான் இந்த 10 முன்னணி வீரர்களுக்கும் கடைசி!

சென்னை: நடப்பு உலக கோப்பை தொடர் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கடைசி உலக கோப்பை தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் டோணியும் ஒருவர்.

வயது மூப்பு தவிர்த்து, காயம், டீம் பாலிடிக்ஸ் என பல காரணங்களால் வீரர்கள் அடுத்த உலக கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் தொடராமல், இடையிலேயே ஓய்வு பெற திட்டமிட்டுள்ளனர். சிலர் இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறவும் திட்டமிட்டுள்ளனர். அதில் முக்கியமான பத்து வீரர்களின் பட்டியல் இதோ...

டோணி

டோணி

இந்திய அணியின் கேப்டன் டோணிக்கு தற்போது 33 வயதாகிறது. உலக கோப்பையை வென்றாலும், தோற்றாலும், அதையே காரணமாக சொல்லிவிட்டு வெளியேற தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியே வெளியேறாவிட்டாலும், அடுத்த உலக கோப்பை வரை அணியில் நீடிக்கப்போவதில்லை.

குமார் சங்ககாரா

குமார் சங்ககாரா

இவரும் டோணியை போன்றே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம். 37 வயதான சங்கக்காரா உலக கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போவது உறுதியாகியுள்ளது.

ஜெயவர்த்தனே

ஜெயவர்த்தனே

37 வயதான இலங்கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜெயவர்த்தனேயும் ஓய்வு முடிவை எடுத்த வீர்ரகளில் முக்கியமானவர். இவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

அப்ரிடி

அப்ரிடி

பாகிஸ்தானின் அதிரடி பேட்ஸ்மேனும், சுழற்பந்து வீச்சாளருமான சாகித் அப்ரிடி 16 வயது முதல் கிரிக்கெட் ஆட்டத்தில் இருப்பவர். 34 வயதான அவரும் அடுத்த உலக கோப்பை போட்டிவரை அணியில் இருக்கமாட்டார்.

மிஸ்பா

மிஸ்பா

ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதில் வயது முதிர்ந்தவர் என்றால் அது மிஸ்பா உல் ஹக்தான். பாகிஸ்தானின் அதிரடி வீரரான இவருக்கு தற்போது 40 வயதென்றால் நம்ப முடியவில்லைதான். இவர் உலக கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சண்டை

ஆஸ்திரேலியாவில் சண்டை

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன்கள் குடுமிபிடி சண்டையில் சிக்காமல் வெளியேறலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளவர் மைக்கேல் கிளார்க். 33 வயதாகிறது.

மெக்கல்லம்

மெக்கல்லம்

நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் பிரெண்டன் மெக்கல்லம் 33 வயதுதான் ஆகிறது என்றாலும், ஓய்வு பெறுவதில் உறுதியாக உள்ளாராம். ஆனால் உடனடியாக இருக்கப்போவதில்லை, இன்னும் இரண்டாண்டுகளாவது அணியில் இருப்பார்.

வெட்டோரி

வெட்டோரி

35 வயதான நியூசி ஆல்ரவுண்டர் டேனியல் வெட்டோரி ஓய்வு முடிவில் உள்ளார்.

ஸ்டெயின்

ஸ்டெயின்

உலகின் நம்பர்-1 வேகப்பந்து வீச்சாளராக வர்ணிக்கப்படும் தெ.ஆப்பிரிக்காவின் ஸ்டெயினுக்கு 31 வயதாகிறது. அடுத்த உலக கோப்பை தொடரில் இவர் விளையாட போவதில்லை என்று தெரிகிறது.

கெயில்

கெயில்

மே.இ.தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெயிலுக்கு தற்போது 35 வயதாகிறது. அணி நிர்வாகத்துடன் அக்கப்போர் செய்து கொண்டே கெயில் அடுத்த உலக கோப்பை வரை தொடரப்போவதில்லை.

Story first published: Thursday, February 5, 2015, 15:55 [IST]
Other articles published on Feb 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+