
லெஃப்டில் டீல்
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. இந்திய பவுலர்களை நிச்சயம் விளாச வேண்டும் என்பது இங்கிலாந்து ஸ்டிராடஜியாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால், வருவோர், போவோர் என அனைவரும் இந்திய பவுலர்களை பாகுபாடின்றி விளாசினர். ரோரி பர்ன்ஸ் 61, ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் எடுக்க, வழக்கம் போல் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்திய பவுலர்களை லெஃப்டில் டீல் செய்தார். 165 பந்துகளை சந்தித்த ரூட், 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா, ஷமி, இஷாந்த், சிராஜ் என எவரது பந்துவீச்சிலும் இம்பேக்ட் இல்லை. அதற்கு காரணம் பிட்ச் என்றால், இந்த உலகம் ஒத்துக் கொள்ளாது. இங்கிலாந்து பந்து வீசிய அந்த முதல் செஷன் தான், பிட்ச் பவுலிங்கிற்கு பெருமளவு ஒத்துழைத்தது. அதன்பிறகு, பேட்ஸ்மேன்கள் ராஜ்ஜியம் தான்.

வாய்ப்பிருக்கு.. ஆனால்?
இதே பிட்சில், இந்தியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்திருந்தால், நிச்சயம் கதை வேறுமாதிரி ஆகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நிச்ச்சயம் இங்கிலாந்து 200 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியிருக்கும். இந்தியாவும், பேட்டிங்கில் 350 ரன்களாவது அடித்திருக்கும். கோலி பேட்டிங்கை தேர்வு செய்ய, பிட்ச் பல்டி அடிக்க, நிலைமை இப்போது பரிதாபத்திற்குரிய நிலைக்கு சென்றுவிட்டது. சரி.. இதற்கு மேல், இந்தியா மீண்டு வர வாய்ப்பிருக்கிறதா? என்றால், யெஸ்! என்பேன். சரி.. இந்தியா மீண்டு வர எத்தனை பெர்செண்டேஜ் வாய்ப்பிருக்கிறது? என்று கேட்டால், 5% என்று சொல்வேன். ஷாக் ஆகக் கூடாது. இந்தியா மீண்டு வர வாய்ப்புள்ளது என்று தான் கூறினேனே தவிர, 'நிச்சயம் உண்டு' என்று கூறவில்லை.

2 நாட்கள் பேட்டிங்
காரணம், இன்று தான் மூன்றாவது நாள் ஆட்டமே தொடங்க உள்ளது. இந்த நாளோடு சேர்த்து, மொத்தம் 3 நாட்கள் இந்த மேட்சில் மீதம் உள்ளன. எப்படியும் இன்று முதல் செஷன் தொடக்கி 5 டூ 10 ஓவருக்குள் இங்கிலாந்து ஆல் அவுட்டோ, அல்லது டிக்ளேரோ செய்துவிடும். இந்தியாவுக்கு எப்படியும் 360 ரன்கள் லீட் வைக்கும். அதன் பிறகு இந்தியா 2வது இன்னிங்ஸை தொடங்க வேண்டும். நமது பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடி, இன்று மற்றும் நாளை என முழுதாக இரண்டு நாட்களுக்கு பேட்டிங் செய்தே ஆக வேண்டும். இந்தியா, இந்த போட்டியில் மீண்டு வர, இந்த இரண்டு நாட்களும் முழுமையாக இந்த இந்தியா பேட்டிங் செய்தாக வேண்டும். போட்டி ஒருவேளை இந்தியாவில் நடந்திருந்தால் கூட, இந்த 2 நாட்களுக்கு பேட்டிங் என்பதில் ஒரு 30% வாய்ப்புள்ளது என்று கூறலாம். ஆனால், இங்கிலாந்து மண்ணில், அந்த அணிக்கு எதிராக, இந்தியா 2 நாட்கள் முழுமையாக பேட்டிங் செய்தாக வேண்டும் என்றால் அதன் சாத்தியக்கூறுகளை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு மிக மிக கடினம். இன்று ஒருநாள் முழுமையாக பேட்டிங் செய்துவிட்டாலே அது சாதனை தான்.

ஜீரோ மிடில் ஆர்டர்
இந்தியாவின் பேட்டிங்கில் அவ்வளவு குளறுபடி உள்ளது. மிடில் ஆர்டர் பூஜ்ய நிலையில் உள்ளது. புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவருமே தியான மோடுக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. டாப் ஆர்டர் அடித்தால் தான் உண்டு. லோ ஆர்டர் ஏதாவது முயற்சி செய்யலாம். இப்படியொரு பேட்டிங் சொதப்பலை வைத்துக் கொண்டு, நாம் எப்படி முழுமையாக 2 நாட்கள் பேட்டிங் செய்ய முடியும்? எனினும், இந்த கிரிக்கெட் விளையாட்டில், எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். திடீரென மேஜிக் நடக்கலாம். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இந்தியா 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் அடித்தது போன்று. ஆனால், ஒவ்வொரு முறையும் மேஜிக் நடக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

4வது மேட்சை பற்றி யோசிக்கலாம்
இதனால் தான் சொன்னேன்.. இந்தியா மீண்டு வர வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு 5 சதவிகிதம் தான் வாய்ப்பிருக்கிறது என்று. ஸோ, ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இந்த போட்டி இந்தியாவின் கைகளில் இருந்து வெகுதூரம் சென்றுவிட்டது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு அருகில் நிற்கிறது. தொடரை 1-1 என்று லெவல் செய்வதில் ரூட் படை மிகத் தீவிரமாக உள்ளது. 2வது போட்டியில் வாங்கிய அடியை, இந்தியாவுக்கு 3வது போட்டியில் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். ஸோ, நான்காவது டெஸ்ட் போட்டியில், மீண்டும் இந்திய அணி கம்பேக் கொடுப்பதை பற்றி இனி யோசிப்பது உசிதம். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். அடுத்த போட்டியில் இஷாந்த் ஷர்மாவை உட்கார வைத்தால், இந்தியாவுக்கு நல்லது என்பதை சொல்லிக் கொண்டு!.


Click it and Unblock the Notifications