Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிச்சே ஆகனும்... சிக்கலான நிலையில் இந்தியா.. இன்று ஆஸி.யுடன் "ஆசிட் டெஸ்ட்"!

மொஹாலி: டி20 உலகக் கோப்பைப்போட்டியில் இன்று வாழ்வா சாவா போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இதில் எது வெல்கிறதோ அது அரை இறுதிக்குச் செல்லும். தோற்கும் அணி வீட்டுக்குச் செல்லும்.

கோப்பையை வெல்லும் அணி இந்தியா என்று பலரும் கணித்த நிலையில் இந்தியா தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோற்றதால் தற்போது இந்தியாவின் நிலை கவலைக்கிடமான நிலைக்கு வந்து விட்டது.

இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதும் இறுதி லீக் போட்டியில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும். இல்லாவிட்டால் தொடரை விட்டு வெளியேற்றப்படும் அவல நிலை உருவாகி விடும்.

சாதகமான நிலைதான்

சாதகமான நிலைதான்

இந்தியாவைப் பொறுத்தவரை டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை விட எப்போதுமே ஆதிக்கம் செலுத்தக் கூடிய அணிதான். அதில் சந்தேகமே இல்லை. இது நமக்கு சாதகமாகவே உள்ளது.

கடந்த போட்டிகளில் நாமே ராஜா

கடந்த போட்டிகளில் நாமே ராஜா

ஆஸ்திரேலியாவுடன் மோதிய கடந்த 5 போட்டிகளில் நாம் தோற்றதே இல்லை. புள்ளி விவர அளவில் இது நமக்கு ஆறுதல் தரலாம். ஆனால் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று நாம் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதால் வீரர்களுக்கு பிரஷர் அதிகமாக இருக்கிறது.

2 வெற்றி ஒரு தோல்வி

2 வெற்றி ஒரு தோல்வி

இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. அடுத்து பாகிஸ்தானை வென்றது. 3வது போட்டியில் வங்கதேசத்திடம் தப்பிப் பிழைத்து கரை சேர்ந்தது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்துடன் முதல் போட்டியில் தோற்றது அடுத்து வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி கடைசிப் போட்டிக்கு வந்துள்ளது.

இந்தியாவுக்கு சாதகமாக புள்ளிவிவரம்

இந்தியாவுக்கு சாதகமாக புள்ளிவிவரம்

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை 12 டி20 போட்டிகளில் ஆடியுள்ளன. அதில் 8 போட்டிகளில் இந்தியாவும், 4ல் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன.

கடைசி 5 போட்டிகளில் இந்தியா வெற்றி

கடைசி 5 போட்டிகளில் இந்தியா வெற்றி

இதில் கடைசியாக இரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில் இந்தியாவே வென்றுள்ளது. இதில் 3 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் நடந்தவை.

இந்தியாவில்

இந்தியாவில்

இந்தியாவில் இரு அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலுமே இந்தியாதான் வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த 6 போட்டிகளில் நான்கில் இந்தியாதான் வென்றுள்ளது.

உலகக் கோப்பையில் சமம்

உலகக் கோப்பையில் சமம்

அதேசமயம், உலகக் கோப்பைப் போட்டிகளில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. அதாவது ஆளுக்கு 2 வெற்றிகளுடன் உள்ளன. 2007ல் இந்தியா வெற்றி பெற்றது. அது அரை இறுதிப் போட்டியாகும். அத் தொடரில் இந்தியா கோப்பையை வென்றது.

2010ல் லீக் தோல்வி

2010ல் லீக் தோல்வி

2010 உலகக் கோப்பைப் போட்டியில் லீக் சுற்றில் இந்தியாவை, ஆஸ்திரேலியா தோற்கடித்தது. இப்போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

2012 லீக்

2012 லீக்

2012ல் நடந்த போட்டியில்லீக் சுற்றில் ஆஸ்திரேலியா இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2014ல் நடந்த போட்டியில் இந்தியா, 73 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைச் சாய்த்தது.

பேட்டிங் மைதானம்

பேட்டிங் மைதானம்

மொஹாலி மைதானம் பேட்டிங்குக்கு உகந்தது. எனவே டாஸ் வெல்வது முக்கியமானதாகும். இந்தியா முதலில் பேட் செய்து அதிக ரன்களைக் குவித்தால் வெற்றி குறித்து சிந்திக்க முடியும். அதேசமயம், பீல்டிங், பவுலிங்கும் முக்கியமானது.

அஸ்வின்

அஸ்வின்

இந்தியாவுக்கு துருப்புச்சீட்டாக அஸ்வின் இரு்பபார் என்று நம்பலாம். அதேசமயம், ஆஸ்திரேலியாவிடம் ஸ்பின்னர்கள் பிரமாதமான அளவில் இல்லை. குறிப்பாக 2வது ஸ்பின்னர் இல்லை என்பது பின்னடைவாகும்.

Story first published: Sunday, March 27, 2016, 16:25 [IST]
Other articles published on Mar 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+