
டி20 போட்டிகளில்
டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை மொத்தம் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளுமே சம பலத்தில் உள்ளன. அதாவது தலா 2 போட்டிகளை இரு அணிகளும் வென்றுள்ளன.

அதிகபட்சம்
இரு அணிகளில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்த அணி மேற்கு இந்தியத் தீவுகள்தான். 2010ம் ஆண்டு நடந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தே அதிகபட்ச ஸ்கோராகும்.

தனி நபர் ஸ்கோரில் கெய்ல்...!
தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோரும் மேற்கு இந்தியத் தீவுகளிடமே உள்ளது. அதாவது கிறிஸ் கெய்ல் போட்ட 66 பந்துகளில் 98 ரன்கள்தான் தனிப்பட்ட வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

சிறந்த பவுலிங்
இரு அணிகளில் சிறந்த பவுலிங்கும் மேற்கு இந்தியத் தீவுகளிடமே உள்ளது. அந்த அணியின் கேப்டன் டேரன் சமி 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்ததே பெஸ்ட் பவுலிங் ஆகும்.

அதிக சிக்ஸர்கள்
அதிக சிக்ஸர்கள் வீசிய வீரராக கெய்ல் திகழ்கிறார். அவர் 9 சிக்ஸர்களை இந்தியாவுக்கு எதிராக விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக மொத்தி எடுத்தால்
வரலாறுகள் எப்போதும் கை கொடுக்காது. அந்த நேரத்தில் எப்படி ஆடுகிறோம் என்பதை வைத்தே முடிவுகள் அமையும். அந்த வகையில் விராத் கோஹ்லி மட்டுமல்லாமல் ஷிகர் தவான், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா என அனைவருமே அடித்து ஆடி நொறுக்கி அள்ளினால் மேற்கு இந்தியத் தீவுகளை தவிடுபொடியாக்க முடியும்.


Click it and Unblock the Notifications











