சென்னை: அதிக அளவில் உலகக் கோப்பையை வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியாதான். முரட்டுத்தனமான வெற்றிகளைக் குவித்த ஒரே அணியும் ஆஸ்திரேலியாதான்.
6 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அதில் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. 2 முறை இரண்டாவது இடத்தை பெற்றது.

சர்வ வல்லமையும் படைத்த அணியாகத் திகழும் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் மீண்டும் ஒரு கோப்பையை வெல்லும் வேகத்துடன் அரை இறுதிக்கு வந்துள்ளது. ஆனால் இந்தியாவின் சவால் அதற்கு சற்று கடுமையாகவே இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.