438 குவித்து ஓய்ந்தது தெ. ஆப்பிரிக்கப் புயல்.. சாய்ந்தது இந்திய பவுலிங்...!
மும்பை: மும்பையில் நடந்த 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு முற்றிலும் சீர்குலைந்து போனது. முதல் பந்து முதல் கடைசி வரை விடாமல் வெளுத்தெடுத்து விட்டனர் தென் ஆப்பிரிக்கர்கள்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று சம நிலையில் இருந்தன. இன்று கடைசிப் போட்டி. இதில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும் என்பதால் இரு அணிகளும் முனைப்புடன் இருந்தன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
நம்பிக்கையுடன் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியாவுக்கு கடைசி வரையில் அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது. முதல் பந்து முதல் அடித்து விளையாட ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா கடைசி வரை விடவே இல்லை. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 438 ரன்களைக் குவித்து விட்டது.
தொடக்க ஆட்டக்காரர் குவின்டைன் டி காக் 109 ரன்கள் குவித்தார். அம்லா அதி வேகமாக ஆடி 23 ரன்களில் வீழ்ந்தார். டூபிளஸிஸ் 133, டிவில்லியர்ஸ் 119 ரன்களைக் குவித்தனர். மில்லர் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார்.

அதிரடி ரன் குவிப்பு
தொடக்க ஆட்டக்காரர்கள் குவின்டைன் டி காக்கும், அம்லாவும் இணைந்து அதிரடி காட்டினர். அம்லா 23 ரன்களில் வீழ்ந்தாலும் கூட காக் பிரித்து விட்டார். அவருடன் பாப் டூபிளசிஸும் இணைந்து அதிரடி ஆட்டத்தில் குதித்ததால் இந்தியா தடுமாற்றத்தைக் கண்டது.

சென்னை தெம்பு பலன் தரவில்லை
இந்திய அணிக்கு கடைசியாக நடந்த சென்னை போட்டி புதுத் தெம்பைக் கொடுத்திருந்தது. அப்போட்டியில், 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ஆனால் இன்று இந்திய பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலி்ருந்தே சொதப்பினர்.

ராசியான மைதானம்
இன்று போட்டி நடந்த மும்பை வாங்கடே மைதானம் இந்தியாவுக்கு ராசியானது. இங்கு இதற்கு முன்பு 1996ல் 2 முறையும், கடந்த 2005ம் ஆண்டு ஒருமுரையும் தென் ஆப்பிரிக்காவுடன் மோதி, மூன்று போட்டிகளிலுமே இந்தியா வென்றுள்ளது. எனவே இந்த ராசியும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது.

அஸ்வின் இல்லாத குறை
இரு அணிகளிலுமே சில காயங்களால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அஸ்வின் இல்லை. அவரது இடத்தை ஹர்பஜனை வைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறார் கேப்டன் டோணி.

டுமினி, மார்னி மார்க்கல்
தென் ஆப்பிரிக்க அணியில் மார்னி மார்க்கல், டுமினி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனால் கடந்த 2 போட்டிகளாக டுமினி ஆடவில்லை. கடைசிப் போட்டியில் மார்னி மார்க்கல் ஆடவில்லை.

கிறிஸ் மோரிஸ் சரியில்லையே
மார்னி மார்க்கலுக்குப் பதில் சேர்க்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் சரியாக பந்து வீசவில்லை. ரன்ரேட்டைக் குறைக்கத் தெரியவில்லை அவருக்கு. விக்கெட்களையும் பெரிய அளவில் அவர் வீழ்த்தவில்லை.

ரோஹித், கோஹ்லி, ரஹானே
ரோஹித் சர்மா, கோஹ்லி, அஜிங்கியா ரஹானே ஆகியோர் கண்டிப்பாக அடித்து ஆடியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தள்ளி விட்டனர்.

டோணி - ரெய்னா
மறுபக்கம் கேப்டன் டோணி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் பொறுப்புகள் கூடுதலாகவே உள்ளன. டோணி சற்று நல்ல பார்மில்தான் உள்ளார். ரெய்னாதான் சொதப்புகிறார்.

சொதப்பல் பந்துவீச்சு
சென்னைப் போட்டியைப் போலவே மும்பை போட்டியிலும் ஹர்பஜன் சிங், அக்சார் படேல், அமீத் மிஸ்ரா ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்று யாரைடுய பந்து வீச்சும் பலன் தரவில்லை.


Click it and Unblock the Notifications