Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து டூர்.. இந்திய அணியின் "தலையெழுத்து".. தீர்மானிக்கும் "மும்மூர்த்திகள்"

மும்பை: ஐபிஎல் கனவு பாழாய் போனதால், ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது இங்கிலாந்து சுற்றுப்பயணம் தான். அங்குள்ள பிட்ச்களில், நமது பேட்ஸ்மேன்கள் ஆடுவதைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது. இதில், மூன்று முக்கிய வீரர்களின் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்க வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

 புதிய அனுபவம்

புதிய அனுபவம்

இதில் குறிப்பாக, ரசிகர்களின் புதிய அனுபவமாக இருக்கப் போவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தாக்குதலுக்கு தயாராக உள்ளது. கோலி ஆர்மியும் அணியும் தயாராக உள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், விக்கெட் கீப்பர் சாஹா கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎஸ் பரத் என்பவரையும் அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ. இன்று தான் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 3 விக்கெட் கீப்பர்களுடன் பயணிக்கிறது இந்திய அணி.

 களத்தில் தாக்குப்பிடித்தால்

களத்தில் தாக்குப்பிடித்தால்

இதில், நியூசிலாந்து Pace அட்டாக்கை திறம்பட சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மூன்று வீரர்கள் கேப்டன் விராட் கோலி, புஜாரா மற்றும் ரஹானே. அதாவது 2021-ன் மும்மூர்த்திகள். இவர்கள் மூவரில், குறைந்தது ஒருவராவது களத்தில் தாக்குப்பிடித்தால் தான் 300+ ரன்களை கடக்க முடியும். இருவர் நின்றுவிட்டால், 400+ உறுதி. அந்தளவுக்கு இவர்களின் பங்கு முக்கியமானது.

 கோலியை விட அதிகம்

கோலியை விட அதிகம்

புஜாரா இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் அடித்துள்ள ரன்கள் 500. ஆவரேஜ் 29.41. பெஸ்ட் ஸ்கோர் 132. இங்கிலாந்து பிட்சில் ஒரேயொரு சதம் அடித்திருக்கிறார். அதுவே ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி தான். நியூசிலாந்து பவுலர்கள் Pace அட்டாக்கை திறம்பட சமாளிப்பதில் புஜாராவின் பங்கு கோலியை விட அதிகம் என்றால் அது மிகையாகாது.

 மிகப்பெரிய சுமை

மிகப்பெரிய சுமை

கேப்டன் கோலியை பொறுத்தவரை, இங்கிலாந்தில் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். மொத்த ரன்கள் 727. ஆவரேஜ் 36.35. பெஸ்ட் ஸ்கோர் 149. மொத்தம் இரண்டு சதங்களை அங்கு அடித்திருக்கிறார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட சிறந்த ஆவரேஜ் வைத்திருப்பது கோலியின் பிளஸ். மிடில் ஆர்டரில் அணியை சுமக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு கோலி தோளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 மனஉறுதி

மனஉறுதி

துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே சமீப காலமாக கன்சிஸ்டன்சி இல்லாமல் தடுமாறி வந்தார். ஆனால், சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் அடித்த சதம் நிச்சயம் மனதளவில் ரஹானேவின் மனஉறுதியை உச்சத்தில் வைத்திருக்கும் என்று நம்பலாம். இங்கிலாந்தில், ரஹானேவும் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மொத்தம் அடித்துள்ள ரன்கள் 556. பெஸ்ட் ஸ்கோர் 103. பேட்டிங் ஆவரேஜ் 29.26.

 தலையெழுத்து

தலையெழுத்து

கோலி, புஜாரா, ரஹானே ஆகிய மூவரும் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், லோ ஆர்டர் என்று இந்திய பேட்டிங்கின் மூன்று தளங்களையும் பேலன்ஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ரோஹித், ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் அடிக்கும் ரன்களோ, விளாசும் சதங்களோ எக்ஸ்டரா இணைப்பு போன்றுதான். இந்த மும்மூர்த்திகளின் ஆட்டத்தை பொறுத்தே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும்.

Story first published: Saturday, May 22, 2021, 20:36 [IST]
Other articles published on May 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+