For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர் ஸ்டார் இல்லாத சினிமாவா.. சி.எஸ்.கே. இல்லாத ஐபிஎல்லா... தடையால் "ஷாக்"கில் ரசிகர்கள்!

சென்னை: 2 முறை ஐபிஎல் சாம்பியனாகவும், அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறிய, ஐபிஎல் அணிகளிலேயே அசைக்க முடியாத வலுவான அணியாக வலம் வந்து கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் களை இழக்கும் என்று தெரிகிறது.

மேலும் எம்.எஸ்.டோணி என்ற மந்திரக் கேப்டன் உள்ளிட்ட வீரர்கள் இல்லாத ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2 வருட தடை காலத்தின்போது டோணி உள்ளிட்டோர் வேறு அணிகளில் இணைவார்களா அல்லது விளையாடாமல் இருப்பார்களா என்பதும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

2008 முதல்

2008 முதல்

2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அன்று முதல் இருந்து வரும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இந்த அணி இயங்கி வருகிறது.

மாறாத கேப்டன் டோணி

மாறாத கேப்டன் டோணி

அணியின் கேப்டனாக 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் கேப்டன் டோணி. அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருப்பவர் ஸ்டீபன் பிளமிங்.

வெற்றிகரமான ஒரே அணி

வெற்றிகரமான ஒரே அணி

ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் வெற்றிகரமான அணி சென்னைதான். இதுவரை 2 முறை கோப்பையை வென்றுள்ளது. 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் ஆனது. 2010ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 தொடரில் சாம்பியன் ஆனது. பின்னர் 2014ல் மீண்டும் சாம்பியன் ஆனது.

இந்தியா சிமெண்ட்ஸ்

இந்தியா சிமெண்ட்ஸ்

பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் வசம்தான் இத்தனை காலமாக இந்த அணி இருந்து வந்தது. ஆனால் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்தும், சீனிவாசன் பிசிசிஐ பதவிகளுக்குப் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதற்கு கை மாற்றி விட்டனர்.

வெற்றி நடை போடு

வெற்றி நடை போடு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் 67 சதவீத வெற்றியை ஈட்டியுள்ளது. மொத்தம் 39 போட்டிகளில் விளையாடி 26 வெற்றிகளையும், 13 தோல்விகளையும் சந்தித்துள்ளது. அதேபோல சாம்பியன்ஸ் லீக் தொடரில் 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றி ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

4 முறை 2வது இடம்

4 முறை 2வது இடம்

ஐபிஎல் தொடர்களில் 2 முறை கோப்பையை வென்ற சென்னை அணி, 4 முறை இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் இதுவரை நடந்துள்ள 8 தொடர்களில் சென்னை அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதும் ஒரு சாதனையாகும்.

போட்டிகள் களை இழக்கும்

போட்டிகள் களை இழக்கும்

ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதளால் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறப் போகின்றன. இது நிச்சயம் ஐபிஎல் போட்டிகளுக்கு கவர்ச்சி சேர்க்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோணி இல்லாமல் ஐபிஎல் போட்டியா?

டோணி இல்லாமல் ஐபிஎல் போட்டியா?

அதுவும் டோணி, சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட முக்கியமான சென்னை வீரர்கள் இல்லாத ஐபிஎல் போட்டியில் சூடு, சுவை நிச்சயம் குறைந்து போகும் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள்.

Story first published: Tuesday, July 14, 2015, 14:32 [IST]
Other articles published on Jul 14, 2015
English summary
Chennai Super Kings fans are upset over the ban on the team by mthe SC appointed Lodha committiee today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+