"டோணி ரகசியத்தை" தென்னாப்பிரிக்காவிடம் புட்டு புட்டு வைத்து ஆப்படிப்பாரா கிர்ஸ்டன்?
மெல்போர்ன்: இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் டோணி அன்ட் கோ உலகக் கோப்பையை வென்ற ரகசியத்தை தென்னாப்பிரிக்காவுக்கு தெரிவித்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியா தென்னாப்பிரிக்காவை ஒருமுறை கூட தோற்கடித்தது இல்லை. இந்நிலையில் தான் வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் நகரில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

கேரி கிர்ஸ்டன்
தென்னாப்பிரிக்க அணியின் பயிற்ச்சியாளர்களாக முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனும், ஐபிஎல் போட்டிகளில் டோணியுடன் சேர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய மைக் ஹஸ்ஸியும் நியமிக்கப்பட்டுள்ளனர். (இவரை சமீபத்திய ஏலத்தில் மீண்டும் சென்னை அணி வாங்கியுள்ளது)

ஹஸ்ஸி
மைக் ஹஸ்ஸி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்காக என பிரத்யேக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த ஒரு போட்டிக்கு மட்டும் தான் தென்னாப்பிரிக்க அணிக்கு பயிற்சி அளிக்கிறார்.

ரகசியங்கள்
2008ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கிர்ஸ்ட்ன். இந்நிலையில் அவர் தென்னாப்பிரிக்க அணியிடம் இந்தியா உலகக் கோப்பை வென்ற ரகசியங்களை எல்லாம் தெரிவித்து வரும் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் டோணி அணிக்கு ஆப்படித்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

டிப்ஸ்
மெல்போர்ன் நகரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ஒருவரிம் பயிற்சியாளர்கள் உங்களிடம் என்ன தெரிவித்துள்ளனர் என்று கேட்டதற்கு, அவரோ சிரித்துக் கொண்டே ரவீந்திர ஜடேஜாவை போன்றே பந்துவீசுமாறு தெரிவித்தனர் என்றார்.

டோணி
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியபோது ஹஸ்ஸி டோணியின் வியூகங்களை அருகில் இருந்து பார்த்தவர். அதனால் அவர் டோணியின் வியூகங்களை தென்னாப்பிரிக்க அணியிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications