Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதற்கு முன்பு இப்படித்தான் வாக்கு கொடுத்தார்.. நடராஜன் பற்றி கோலி சொன்ன அந்த வார்த்தை.. நம்பலாமா?

சிட்னி: நடராஜனுக்கு டி 20 உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு அளிப்பேன் என்று கோலி கூறியுள்ளதை நம்பலாமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியில் ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் நடராஜன் அறிமுகம் ஆனார். அதன்பின் டி 20 தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஆடினார் . இந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார்.

இந்திய அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் தமிழக வீரர் நடராஜன் உலகம் முழுக்க வைரலாகி வருகிறார். தமிழக மக்கள் மட்டுமின்றி.. உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை பாராட்டி வருகிறார்கள்.

நடராஜன்

நடராஜன்

நடராஜன் மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கிறார். நடராஜன் மிகவும் கடினமாக உழைக்க கூடிய வீரராக இருக்கிறார். அதேபோல் அவர் மிகவும் பணிவான குணம் கொண்டவராக இருக்கிறார். அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரிகிறது. அவர் இதேபோல் கடினமாக உழைப்பார் என்று நம்புகிறேன். நடராஜன் இதே போல் தொடர்ந்து ஆட வேண்டும்.

இடதுகை

இடதுகை

இதேபோல் தன்னை மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இடதுகை பவுலர்கள் எப்போதும் ஒரு அணிக்கு பொக்கிஷம் போன்றவர்கள். அடுத்த வருடம் டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடராஜன் இதே போல ஆடினார் என்றால் சிறப்பாக இருக்கும் என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

முக்கியம்

முக்கியம்

அதாவது நடராஜன் இடதுகை பவுலர். அவர் சிறப்பாக ஆடினால் டி 20 உலகக் கோப்பை போட்டியின் போது வாய்ப்பு கொடுப்பேன் என்று கோலி சொல்லாமல் சொல்லியுள்ளார். ஆனால் கோலியின் இந்த பேச்சை நம்பலாமா என்று சந்தேகம் வந்துள்ளது.கோலி 2019 உலகக் கோப்பைக்கு முன் இதேபோல் இடதுகை பவுலர் கலீல் அகமது குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

கலீல்

கலீல்

அதில் கலீல் அஹமது சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் இடதுகை பவுலர். அவர் இப்படியே ஆடினால் உலகக் கோப்பைக்கு கூட தேர்வாவர் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதன்பின் அடுத்த தொடரிலேயே கலீல் அஹமத்திற்கு வாய்ப்பு கொடுக்காமல் அணியில் இருந்து கோலி நீக்கினார்.

கேள்வி?

கேள்வி?

உலகக் கோப்பையிலும் வாய்ப்பு கொடுக்கவில்லை. முதல் தொடரில் பாராட்டிவிட்டு அடுத்த தொடரிலேயே கலீல் அஹமதை கோலி கழட்டிவிட்டார். இதனால் கோலி தான் வாக்கு கொடுத்தபடி நடராஜனுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருவதால் அவரை புறக்கணிக்கவே முடியாது என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Thursday, December 10, 2020, 23:49 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+