For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷாந்த் சர்மாவுக்கு கைகொடுத்தது... லார்ட்ஸ் மைதானம் கோஹ்லிக்கு வெற்றியைத் தருமா!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. கபில் மற்றும் தோனிக்குப் பிறகு இங்கு கோஹ்லி வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

லண்டன்: முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், லண்டனில் உள்ள லார்ட் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது இந்தியா. இந்த மைதானம் இஷாந்த் சர்மாவுக்கு ராசியானது. கபில்தேவ் மற்றும் தோனியைத் தொடர்ந்து இங்கு வெற்றி பெறுவதற்கு கோஹ்லி காத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது. எட்பாஸ்டன் மைதானத்தில் விளையாடிய 17 போட்டிகளில் எந்த ஆசிய அணியும் வென்றதில்லை என்ற மோசமான சாதனை தொடர்கிறது.

Will lords ground be favourable to virat kohli

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9ம் தேதி துவங்க உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 17 டெஸ்ட்களில் இந்தியா விளையாடியுள்ளது. அதில் 2 முறை வென்றுள்ளது. நான்கு டெஸ்ட் டிராவானது. இங்கிலாந்து 11 முறை வென்றுள்ளது.

2014ல் நடந்த போட்டியில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகனானார் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. அதனால், 9ம் தேதி நடக்கும் டெஸ்டில் இஷாந்த் சர்மா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இதுவரை 13 கேப்டன்கள் தலைமையில் இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியுள்ளது. அதில் 1986ல் கபில்தேவ் தலைமையிலான அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2014ல் தோனி தலைமையிலான அணி 95 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது. அந்த வரிசையில் கோஹ்லி தலைமையிலான அணி இடம்பிடிக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, August 7, 2018, 13:00 [IST]
Other articles published on Aug 7, 2018
English summary
Will lords cricket ground be favourable to virat kohli.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+