
முக்கியமான டெஸ்ட்
இங்கிலாந்து-இந்தியா நடுவேயான 3 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2வதில் இந்தியாவும், 3வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. தொடரின் முக்கியமான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை, பருத்தி உற்பத்திக்கு பெயர் பெற்ற, மான்செஸ்டர் நகரிலுள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

சுதந்திரத்துக்கு முன்பு முதல் போட்டி
1936ம் ஆண்டு இந்தியா முதன்முறையாக ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. அப்போட்டி டிராவில் முடிவடைந்தது.

எந்த போட்டியிலும் ஜெயிக்கலையே...
இதன்பிறகு 8 முறை இரு அணிகளும் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியுள்ளன. அதில் ஐந்து போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், 3ல் இங்கிலாந்து வென்றது. ஒரு போட்டியிலும் இந்தியா வெற்றி பெறவில்லை.

சோதனையை சாதனையாக்குமா இந்தியா?
நாளை ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்க உள்ள டெஸ்ட் போட்டி இவ்விரு அணிகளும் இங்கு மோதும் 9வது போட்டியாகும். இந்த போட்டியில் 78 ஆண்டுகால சோதனை வரலாற்றை மாற்ற இந்திய அணி தயாராக உள்ளது.


Click it and Unblock the Notifications











